Show all

சந்திரபாபு நாயுடுவுக்கும் மகனுக்கும் மாவோயியத்தினர் கொலை மிரட்டல்

ஆந்திரா-ஒடிசா மாநில எல்லையில் வனப் பகுதியில் பதுங்கி இருந்த மாவோயியத்தினர் மீது இரு மாநில அதிரடிப் படை வீரர்கள் தாக்குதல் நடத்தி 28 பேரை சுட்டுக் கொன்றனர். இதில் மாவோயியத்தினர் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப் பட்டதாக ஆந்திர காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் மாவோயியத் அமைப்பின் தலைவர் ஷியாம் பெயரில் ஆந்திராவில் உள்ள அனைத்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் 5 பக்க மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் மாவோயியத்தினர் 28 பேர் கொலை செய்யப்பட்டது போலி தீர்த்;;;;துக்கட்டுதல் என்றும் இதற்காக முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் லோகேஷ் ஆகியோரை தற்கொலை படை தாக்குதல் நடத்தி பழி வாங்குவோம் என்று மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. ஆந்திரா - ஒடிசா எல்லையில் நடந்தது போலி தீர்த்துக்கட்டுதல். இதில் காயம் அடைந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து வைத்து அடுத்த நாள் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள். ஆந்திராவில் மாவோயியத்தினர்களோ, நக்சலைட்தீவிரவாதிகளோ இல்லை. அவர்களை அழித்து விட்டோம் என்று காட்டிக் கொள்வதற்காகவே இதை நடத்தி இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் “கோவர்ட் ஆபரேஷன்” என்ற பெயரில் காவல்துறையினர் மாவோயியத்தினர்களைப் பிடித்து வைத்து அவர்களுக்கு சாப்பாட்டில் நஞ்சு கலந்து கொடுத்து அவர்கள் மயங்கியதும் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள். சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கட்டை வெட்டியதாக தமிழக தொழிலாளர்களையும் இதுபோல் தான் பிடித்து வைத்து நஞ்சு கலந்தும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர். இது மிகப்பெரிய கோழைத் தனமான செயல்.இதற்கு பதில் நடவடிக்கை யில் ஈடுபடுவோம். முதல்- அமைச்சர் சந்திரபாபு நாயுடுவையும், அவரது மகன் லோகேசையும் சும்மா விட மாட்டோம். உங்களுக்கு இனி மரண கண்டம்தான். தெலுங்கானாவில் நயீம் என்ற ரவுடி ராட்சசனை சந்திரபாபு நாயுடுதான் 15 ஆண்டுகள் வளர்த்து விட்டார். அவன் சமீபத்தில் தெலுங்கானா காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். மாவோயியத்தினர்களை ஒழித்து விட்டோம் என்று கூறும் நடுவண் - மாநில அரசுகளுக்குப் பாடம் புகட்டுவோம். அரசியல் மோசடி பேர்வழிகளை காவல்துறையினர் பாதுகாக் கிறார்கள். ஆனால் மாவோயியத்;;தினர்களை கொன்று விருது பெற்றுக் கொள்கிறார்கள். 2004-ல் அலி பிரியில் (திருப்பதி) நடந்த தாக்குதலில் நீ (சந்திரபாபு நாயுடு) தப்பி விட்டாய். இப்போது தப்ப முடியாது. தற்கொலை படை தாக்குதல் நடத்தியாவது உன்னையும் (சந்திரபாபு நாயுடு) உன் மகனையும் (லோகேஷ்) பழி வாங்குவோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. இந்த கடிதம் கணினியில் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி காவல்துறையினர் கூறும்போது, மாவோயியத்தினர்கள் மிரட்டல் கடிதங்களை கையினால்தான் எழுதி அனுப்புவார்கள், இது கணினி அச்சு செய்யப்பட்டு இருப்பதால் சந்தேகம் ஏற் பட்டு உள்ளது. ‘தற்கொலைத் தாக்குதல்’ என்றும் புதிதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். எனவே மாவோயியத்தினர்களுக்கு ஆதரவு அளிக்கும் பொது நல அமைப்புகள் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பி இருக்கலாம் என்று கருதுவதாக தெரிவித்தனர். இந்த மிரட்டலைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவுக்கும், அவரது மகனுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.