Show all

எந்தப் பொத்தானை அழுத்தினாலும் ஒப்புகை சீட்டில் பாரதீய ஜனதா கட்சியின் தாமரை சின்னம்

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநில தேர்தல்களை அடுத்து மின்னணு வாக்கு இயந்திரத்தின் நன்பகத்தன்மை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தரப்பில் கேள்விகள் எழுப்பட்டு வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி போன்றோர் முறைகேடு நடந்து உள்ளது என குற்றம் சாட்டினர். இவ்விவகாரம் நீதிமன்றத்திற்கும் சென்று உள்ளது. காங்கிரஸ் கட்சியும் இவ்வரிசையில் இணைந்து உள்ள இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் எந்தப் பொத்தானை அழுத்தினாலும் ஒப்புகை சீட்டில் பாரதீய ஜனதா கட்சியின் தாமரை சின்னம் மட்டும் வருவதால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

     தேர்தல் சமயத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வது தொடர்பாக வாக்காளர்களுக்கு செயல் விளக்க நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சீட்டில் அச்சடித்து தரும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் ஓட்டை பதிவு செய்த 7 நொடிகளில் வாக்காளார் யாருக்கு எந்த சின்னத்தில் வாக்களித்துள்ளார் என்ற சரிபார்ப்பு சீட்டு வரும். இதனை வெளியே கொண்டு வர முடியாது. இதன் மூலம் நாம் சரியாகத்தான் வாக்களித்தோம் என்பதை அவர்கள் உறுதி செய்து கொள்ள முடியும்.

     மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இதனையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு அளிப்பது எப்படி என்பது தொடர்பான செயல் விளக்கம் அந்த தொகுதியில் நடத்தப்பட்டது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல் விளக்கத்தின் போது எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவிற்கு வாக்கு பதிவானதாக இயந்திரம் வழங்கும் சரிபார்ப்பு சீட்டில் அக்கட்சியின் சின்னம் மட்டுமே வந்தது, இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அம்மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு டெல்லி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. ஏப்ரல் மாதம் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளநிலையில் அறிக்கை கோரப்பட்டு உள்ளது.

     மத்திய பிரதேச மாநிலத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவிற்கு வாக்கு பதிவான விவகாரம் தொடர்பாகவும் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து உள்ளன.

     மோடியின் தகவல் தொழற் நுட்ப ஆர்வம் இதன் பொருட்டுதான் என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.