Show all

நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்களிக்கும் அவசரசட்டத்திற்கு ஆகஸ்ட் 22க்குள் ஒப்புதல்: நடுவண் அரசு

நீட் விலக்கு குறித்து ஆகஸ்ட் 22 அன்றுக்குள் தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தரப்படுமென்று நடுவண் அரசு உச்ச அறங்கூற்று மன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது

நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் மாணவர்கள் சார்பில் வழக்குரைஞர் நளினி சிதம்பரம் தொடர்ந்த மனு உச்ச அறங்கூற்று மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க எதன் அடிப்படையில் நடுவண் அரசு இசைவு தெரிவித்தது என்று இன்று மதியம் 2 மணியளவில் நீதிமன்றத்தில் நேரில் அணியமாகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நடுவண் அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே வேணுகோபாலுக்கு உச்ச அறங்கூற்று மன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில், நடுவண் அரசின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவக் கவுன்சில்-

  • சட்டத்திற்கு ஒப்புதல் தரப்படுமென்று நடுவண் அரசு உச்ச அறங்கூற்று மன்றத்தில் தெரிவித்த தகவலுக்கு முரண்பட்டது.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் சட்ட முன்வரைவுக்கு, நடுவண் அரசின் 3 துறைகள் அனுமதி அளித்துள்ள நிலையில் இந்திய மருத்துவக் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மதியம் அறங்கூற்று மன்றம் கூடியதும் நடுவண் அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே வேணுகோபாலுக்கு மாற்றாக வழக்கறிஞர் துஷார் மேத்தா அணியமானார். அவர் அறங்கூற்று மன்றத்தில், நீட் விலக்கு குறித்து ஆகஸ்ட் 22 அன்றுக்குள் தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தரப்படும் என்று தெரிவித்தார். அதன்படி உடனடியாக சட்டமானது அமலுக்கு வரும்.

அதேபோல தமிழக அரசின் சார்பில் அணியமான வழக்கறிஞர் மற்றும் நடுவண் அரசின் வழக்கறிஞர் இருவரும் அவசர சட்டத்திற்கு அறங்கூற்று மன்றம் தடை விதிக்க முடியாது என்று வாதிட்டனர் சட்ட சிக்கல் எதுவும் இல்லை என்பதாலேயேதான் அவசர சட்டத்திற்கு அனுமதி தரப்பட்டு உள்ளதாக நடுவண் அரசின் வழக்கறிஞரும் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள 22 மருத்துவக் கல்லூரிகளின் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.25,000 கோடி ஆகும். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை எப்படி சேர்ப்பது என்பதை மாநில அரசு தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், இதை நடுவண் அரசு தீர்மானிப்பதை எப்படி ஏற்க முடியும்? இதைவிடக் கொடுமையான அதிகார அத்துமீறல் இருக்க முடியாது.

என்ற அடிப்படையில் தமிழக அரசால் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே இயற்றப் பட்டு நடுவண் அரசின் ஒப்புதலுக்காக குடிஅரசு தலைவருக்கு அனுப்பப் பட்ட அவசர சட்டத்திற்கு ஆகஸ்ட் 22க்குள் நடுவண் அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.