Show all

லாலு மகனை அறைபவர்களுக்கு ரூ.1 கோடி தருவதாக பாஜக அனில் சானி பரபரப்பு கிளப்பியுள்ளார்

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: லாலு மகன் தேஜ் பிரதாப் யாதவை அறைந்தால், ரூ.1 கோடி தருவதாக பாட்னா மாவட்ட பாஜக ஊடக தொடர்பாளர் அனில் சானி, பரபரப்பு கிளப்பியுள்ளார்.

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைந்தது. இதையடுத்து ஐக்கிய ஜனதா தளம், (நம்ம ஊரு பன்னீர், பழனிச்சாமி போல) பாஜக சூழ்ச்சிக்கு அடிபணிந்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

ஆதரவளித்த பாஜகவிற்கு பிரதிபலனாக சுஷில்குமார் மோடிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. (இராதகிருட்டினன் நகரில் அதிமுக வென்றால் தமிழிசைக்கோ வானதி சீனிவாசனுக்கோ துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டியிருக்கும்.) இதையடுத்து லாலு, நிதிஷ் கட்சியினர் இடையே சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மாறி, மாறி தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து பாட்னா மாவட்ட பாஜக ஊடக தொடர்பாளர் அனில் சானி, தேஜ் பிரதாப் கன்னத்தில் யாராவது அறைந்தால், அவருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,617

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.