Show all

முகநூலில் குறையை கண்டுபிடித்த ஆனந்த் பிரகாஷ்க்கு முகநூல் நிறுவனம் 15000 டாலர்

பெங்களூரைச் சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞர் சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகநூலில் லாக் இன் செய்வதில் இருக்கும் ஒரு முக்கிய குறையைக் கண்டுபிடித்துள்ளார்.

 

முகநூலின்; இந்தக் குறையைப் பயன்படுத்தி முகநூலில் கணக்கு வைத்திருக்கும் நபர்களின் செய்தி, புகைப்படம் மற்றும் கடன் அட்டை எண் போன்ற முக்கிய தகவல்களைத் திருட வாய்ப்புள்ளது. முகநூலில்; உள்ள இந்த முக்கிய குறையைக் கண்டுபிடித்து அந்த நிறுவனத்திடம் மின்னஞ்சல் மூலம் ஆனந்த் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

 

மேலும், பொதுவாக முகநூலில் கடவுச்சொல் மறந்துவிட்டால், கடவுச்சொல்லை மறுபதிவு செய்ய தொலைபேசி எண் அல்லது இமெயில் கேட்கும். இதற்கு 6 இலக்க எண்ணை பேஸ்புக் நிறுவனம் அனுப்பும்.

 

அதன் மூலமே மறுபதிவு செய்ய முடியும். அவ்வாறு செய்யும் போது 10-12 முறை தவறாகப் பதிவிட்டால் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுவிடும்.

 

ஆனால், ஆனந்த் பிரகாஷ் வேறொரு முறையையும் கண்டுபிடித்துள்ளார். இந்த எளிமையான முறை மூலம் தங்களது கடவுச்சொல்லை எளிதாக மறுபதிவு செய்து கொள்ளலாம்.

 

இதனையடுத்து முகநூலில் இருந்த குறை சரி செய்யப்பட்டது. மேலும் முகநூலில் குறையை கண்டுபிடித்த ஆனந்த் பிரகாஷ்க்கு முகநூல் நிறுவனம் 15000 டாலர் அறிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.