Show all

அலிகார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் மாணவன் பலி

அலிகார் பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தில் நேற்று இரவு இரண்டு மாணவர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது மாணவர் ஒருவரின் அறை, தாளாளர் அறை மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது மாணவர்கள் தீ வைத்து எரித்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மாணவர்களின் வன்முறையைக் கட்டுப்படுத்த முதலில் கண்ணீர் புகை வீசினர். மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததால்

துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

 

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. அலிகார் பல்கலைகழத்தில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.