Show all

பாஜக அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்: அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது அப்போதைய ஆளும் கட்சியான சமாஜ்வாதியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. வேட்பாளர் அறிவிப்பில் அன்றைய முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பா சிவபால் சிங்கிற்கும் இடையே மோதல் மூண்டது. இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி தோல்வியடைந்தது. இதற்கு உட்கட்சி பூசலும் முக்கிய காரணம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் உத்தர பிரதேச தலைவராக நரேஷ் உத்தம் நேற்று மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையொட்டி லக்னோவில் நடந்த விழாவில் தேசிய தலைவர் அகிலேஷ் பேசியதாவது:

சமாஜ்வாதியில் போலி தலைவர்கள் உள்ளனர். அவர்களால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினோம். அத்தகைய போலி தலைவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோரக்பூர், பூல்பூர் மக்களவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி வெற்றி பெறுவதற்கு இப்போதே முழுவீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். நடுவண் அரசிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். நாட்டை காக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.