Show all

ஆதார் தகவல்களை திருடி முறைகேடாக பயன்படுத்தி பண பரிவர்த்தனை

ஆதார் தகவல்களை திருடி முறைகேடாக பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்ததாக, வங்கி உட்பட 3 நிறுவனங்கள் மீது குற்றவியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பண பரிவர்த்தனைகளில் ஆதார் மிகவும் பாதுகாப்பானது என நடுவண் அரசு கூறிவருகிறது. இந்நிலையில், ஆதார் தகவல்களைத் திருடி முறைகேடாக வங்கிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

     இது தொடர்பாக 3 நிறுவனங்கள் மீது, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் டெல்லி சுழி குற்றவியல் பிரிவில்; புகார் அளித்துள்ளது.

     இதில், கடந்த ஆண்டு சூலை 14ம் தேதி முதல் கடந்த இந்த மாதம் 19ம் தேதி வரை ஒரே நபர் 397 பயோமெட்ரிக் முறையிலான பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார்.

இதில் 194 பரிவர்த்தனைகள் ஆக்சிஸ் வங்கி மூலமாகவும்,

112 இமுத்ரா மற்றும்

91 பரிவர்த்தனைகள் மும்பையை சேர்ந்த சுவிதா இன்போசெர்வ் மூலமாகவும்

மேற்கொள்ளப்பட்டுள்ளன.

     இவை அனைத்திலும் ஒரே மாதிரியான விரல் பதிவு உள்ளது. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை திருடி வைத்திருந்தால்தான் இது சாத்தியமாகும் என,

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.    இதுபற்றி விசாரணை நடத்திய பிறகு வழக்கு பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆதார் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தினால் ஆதார் விதிகளின்படி 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வழி உள்ளது.

     இந்த புகார் தொடர்பாக சுவிதா இன்போசெர்வ் தலைமை செயல் அதிகாரி பரேஷ் ராஜ்டே கூறுகையில்,

‘‘ஆக்சிஸ் வங்கிக்காக ஆதாருடன் இணைந்த பிரீபெய்டு கார்டு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதற்கான பரிசோதனை முயற்சியாகவே இது நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனால் வங்கி கணக்கில் பண இழப்பு எதுவும் ஏற்படவில்லை’’

என்றார்.

     ஆக்சிஸ் வங்கி செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் இருந்து,

எச்சரிக்கை அறிக்கை வந்துள்ளது.

சுவிதா நிறுவனம் பரீட்சார்த்த முயற்சியாகவே பரிவர்த்தனை செய்துள்ளது. இதுதொடர்பாக விளக்கங்களை அளிப்போம். என்றார்.

     அதேநேரத்தில், பதிவு செய்யப்பட்ட பயோமெட்ரிக்கை பயன்படுத்தியதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம்  அளித்த குற்றச்சாட்டுக்கு இந்நிறுவனங்கள் மறுப்போ, விளக்கமோ அளிக்கவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.