11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசு பண மதிப்பிழப்பை கொண்டு வந்து, ரூ.500, ரூ.1000 ரூபாய்தாள்கள் செல்லாதவையாக அறிவித்தது. இந்நிலையில் பணமதிப்பிழப்பாலும், வங்கி ஏடிஎம்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்தால் அதற்கு அபராதம் விதிப்பதாலும், நாட்டில் மிகப்பெரிய ஏடிஎம் வலைஅமைப்பைக் கொண்ட பாரத ஸ்டேட் வங்கி, கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்தில் ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கையை 59,291-லிருந்து 59,200-ஆக குறைத்தன. அதேபோல் பஞ்சாப் தேசிய வங்கியும் 10502-லிருந்து 10083 ஏடிஎம்களாக குறைத்துவிட்டன. அதேபோல் எச்டிஎஃப்சி வங்கியும் 12,230 ஏடிஎம்களிலிருந்து 12,225-ஆக குறைத்துவிட்டன. ஏடிஎம் மையங்களுக்கான பாதுகாவலர், பராமரிப்பு செலவு, மின் கட்டணம் என மொத்தமாக மாதத்துக்கு ரூ.30,000-லிருந்து ரூ.1 லட்சம் வரை ஆகிறதாம். இதனால் ஒரு வங்கி ஏடிஎம் மையங்களுக்கு பக்கத்தில் அதே வங்கி அல்லது அந்த வங்கியுடன் தொடர்புடைய மற்றொரு வங்கிகளின் ஏடிஎம் இருந்தால் ஒன்றை மூடுவது என்ற முடிவுக்கு வங்கிகள் வந்துவிட்டன. அதன்படி மொத்தம் 358 ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மூடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



