Show all

கணக்கில் வராத 25 கோடி ரூபாய் சிக்கி உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள்

சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் அதிரடி சோதனையில், 25 கோடி ரூபாய் சிக்கி உள்ளது. நடுவண் அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து வாபஸ் பெறுவதாக தெரிவித்த உடன், பழைய நோட்டுக்களைக் கொடுத்து, ஏராளமான அளவில் தங்கம் வாங்குவதும், ஹவாலா எனப்படும் சட்டவிரோத பண பரிமாற்ற முறையில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயற்சிப்பதும் நடந்து வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும், சென்னை பாரி முனை பகுதியில் உள்ள நகை கடைகள், ஹவாலா பேர்வழிகளின் வீடுகள் என, எட்டு இடங்களில் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்றும், நான்கு இடங்களில் சோதனைகள் நடந்தன. சோதனையின் போது, கணக்கில் வராத 25 கோடி ரூபாய் சிக்கி உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.