ஹரியானாவில் 15 வயது தலித் சிறுவன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஹரியானா மாநிலம், கோகனா நகரில் உள்ள வீடு ஒன்றிலிருந்து புறாவை திருடிச் சென்றுவிட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில், 15 வயது தலித் சிறுவனைக் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த விசாரணையின்போது, அந்தச் சிறுவனைக் காவல்துறையினர் அடித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தச் சிறுவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தான். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காவல்துறையினர் சிறுவனை அடித்துக் கொன்றுவிட்டதாக கூறி, அவரது உடலுடன் கோகனா காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவனைக் கொன்ற காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சாலை, ரயில் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில், காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சில தினங்களுக்கு முன்னர், ஹரியானா மாநிலத்தில், இரண்டு தலித் குழந்தைகள் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



