காந்தியவாதியும்,சமூக ஆர்வலுவருமான அன்னா ஹசாரேவிற்கு மீண்டும் ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்ததையொட்டி அவருக்கு ‘இஸட் பாதுகாப்பு வழங்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.
காந்தியவாதியும் சமூக ஆர்வலுருமான அன்னா ஹசாரேவிற்கு கடந்த 10-ம் தேதி கொலை மிரட்டல் கடித்தம் வந்தது.அந்த கடித்ததில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உடனான உறவை துண்டிக்க வேண்டும் இல்லை என்றால் கடுமையாக விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று குறிப்பிடபட்டு இருந்தது.
மேலும் அக்கடிதத்தில் அன்னா ஹசாரேவின் சொந்த ஊரான ராலேகான்சித்தி கிராமத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்று குறிப்பிடபட்டு இருந்தது. இந்த மிரட்டல் கடிதம் குறித்து அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள பார்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது மேலும் ஒரு மிரட்டல் கடிதம் அன்னா ஹசாரேவிற்கு வந்துள்ளது.அதில் பன்சல் எனும் பெயரில் உஸ்மனாபாத்திலிருந்து இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் கடிதம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேநேரத்தில் அன்னா ஹசாரேக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மராட்டிய அரசு முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



