மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே நகரில் இன்று அதிகாலை , ரயில் நிலையம் அருகே உள்ள 50 ஆண்டு பழமையான கிருஷ்ணா நிவாஸ் என்ற 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
தானே ரயில் நிலையம் அருகே உள்ள 50 ஆண்டு பழமையான 3 மாடிக் கட்டடம் அதிகாலை 2.30 மணியளவில் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விபத்தில் மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு முன்பு கட்டிடத்தின் நிலை மோசமாக இருந்ததால் அங்கு வசித்த மக்களை காலி செய்யச் சொல்லி தானே நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



