முழுவதுமாக அணு சக்தியால் இயங்கக் கூடிய பிரம்மாண்ட விமானம் தாங்கிக் போர் கப்பலை 63,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்க உள்ள இந்த கப்பல் ஐ.என்.எஸ்., - விஷால் என்று பெயரிட உள்ளது. இந்த போர்க்கப்பல் 65,000 டன் எடையுடன் 50 போர் விமானங்களை தரை இறக்கக் கூடிய வகையில் மிகவும் பிரம்மாண்டமானதாக இருக்கும்.
இந்தியாவின் முதல் அணுசக்தி கப்பலாக விளங்க உள்ள ஐ.என்.எஸ் விஷாலை கட்டமைக்க விருப்பமா எனக் கேட்டு உலகின் முன்னணி 9 கப்பல் கட்டுமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



