கேரளாவில் பெற்ற மகளை பாலியலில் ஈடுபடுத்திய தாய் உள்ளிட்ட 12 பேரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.பள்ளிக்கு குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிக்காக சென்றனர்.அங்கு படிக்கும் 6 வது மாணவிகளிடம், ஆண்களிடம் எப்படி பழக வேண்டும்? பாலியல் பலாத்காரங்களில் எப்படி தப்பித்துக் கொள்வது? அதற்கு எது போன்ற வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்? போன்ற சமுக மற்றும் பாலியல் குறித்த விழிப்புணர் பிரச்சாரம் செய்தனர்.
அப்போது, 13 வயது சிறுமி திடீரென அழுதவாறு எழுந்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்தவர்கள் திடுக்கிட்டு, அந்த சிறுமிடம் ஏன் அழுகிறாய் என அதிகாரிகள் கேட்டது தான் தாமதம், அந்த சிறுமி தனக்கு நேர்ந்த அதிபயங்கர பாலியல் துன்புறுத்தல்களை அடுக்கினார்.
அப்போது, அந்த சிறுமி அதிகாரிகளிடம் கூறுகையில், எனது தாய் இரண்டாவதாக ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் என்னை கடந்த 2 ஆண்டுகளாக பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, அங்கு பாலியல் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்துகிறார்கள் என கூறியதும் அதிகாரிகள் காவல் துறைக்கு தெரியப்படுத்தி அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



