சமந்தாவின் நடிப்பில் தற்போது பேமிலி மேன் 2 என்ற இணையத் தொடர் உருவாகியுள்ளது. இதில் தமிழர் விரோதப் போக்கை முன்னெடுப்பதாக, இந்த இணையத் தொடருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. 07,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பேரறிமுகமாக இருக்கும் நடிகை சமந்தாவின் இணையத் தொடருக்கு சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் தற்போது பேமிலி மேன் 2 என்ற இணையத் தொடர் உருவாகியுள்ளது. முதல் தொடர் சிறப்பாக அமைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். அண்மையில் இதன் விளம்பரக்காணொளி வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தமிழர்களை குறிப்பாக ஈழத்தமிழர்களையும் அவர்களது போராட்டத்தையும் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.சமந்தா நடித்த இணையத் தொடருக்கு எதிர்ப்பு! அமேசான் ப்ரைமில் நாளது 21,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123 (ஜூன் 4-இல்) வெளியாக இருக்கும் இந்த இணையத் தொடரைத் தடை செய்ய வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.