இன்று 32வது பிறந்தநாள் கொண்டாடும் ஐசுவர்யா ராஜேசுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 26,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் மற்றும் தெலுங்கில் திரையுலகில் சுறுசுறுப்பாக வலம்வருபவர் ஐசுவர்யா ராஜேஷ். இன்று 32வது பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்த நாள்; இன்ப அதிர்ச்சியாக, கின்ஸ்லின் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில், நடிகை ஐசுவர்யா ராஜேஷ்வாடகைக்கார் ஓட்டுநராக நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி அவரோடு அவரின் கொண்டாடிகளுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது. டிரைவர் ஜமுனா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வத்திக்குச்சி, படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகை ஐசுவர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக, எஸ்.பி.சௌத்ரி மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் தயாராக உள்ளது. இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். குற்றவியல் சார்ந்த சிலிர்ப்பூட்டும் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் ஐசுவர்யா ராஜேஷ் வாடகைக்கார் ஓட்டுனராக நடிக்கிறார். அவருடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்றைய கால கட்டத்தில், அன்றாட வாழ்க்கையில், வாடகைக்கார் ஓட்டுநர் பலரைக் கடந்து போய் வருகிறோம். ஒரு நடுத்தர குடும்பத்து பெண் வாடகைக்கார் ஓட்டுநரை, மையமாக கொண்டு குற்றம், திகில் கலந்த படமாக இது உருவாக உள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.