17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிங்களவர்களுக்கு படையுதவி செய்து, தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரசை, தமிழகத்தை விட்டே அப்புறப் படுத்த வேண்டும் என்ற கொள்கை நிலைபாடுடைய நாம் தமிழர் சீமான், சிங்கள ஆதரவு காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்புவுடன் இணைந்தது எங்கே என்று குஷ்புவுடன் பவ்வியமாக காட்சி தரும் இந்தப் படம் நம்முள் கேள்வி எழுப்புவது இயல்புதான். எது எப்படியோ, ஊடகங்களுக்கு கிடைத்தது நல்ல தீனி. தமிழ்நாட்டில் டிராபிக் ராமசாமியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனக்கென்ன என்று ஒதுங்கிப் போகும் சமூகத்தில் தன்னலமின்றி அடுத்தவர்காக அக்கறையுடன் குரல் கொடுத்து போராடிவரும் ஓர் மனிதப் படையாகத் திகழ்பவர் அவர். அவரது வாழ்க்கையைத் தழுவி ‘டிராபிக் ராமசாமி’ என்ற பெயரில் திரைப்படமொன்று தயாராகி வருகிறது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கதை தலைவன் டிராபிக் ராமசாமியாக நடிக்கிறார், நடிகை ரோகிணி அவருக்கு மனைவியாக நடிக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகரனின் உதவி இயக்குநராகப் பணி புரிந்த விஜய் விக்ரம் (விக்கி) இப்படத்தை இயக்குகிறார். பிரகாஷ்ராஜ், எஸ்.வி.சேகர், ஆர்.கே.சுரேஷ், மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், அம்பிகா, கஸ்தூரி, உபாசனா, பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி சமூக அநீதிகளைத எதிர்க்கும் இளைஞனாக, ஒரு திரைப்பட நடிகராகவே வருகிறார். இவர்களைத் தவிர அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வரும் 'நாம் தமிழர்’ சீமானும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான குஷ்புவும் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர். சில ஊடகங்கள் குஷ்புவுக்கு ஜோடியாக சீமான் நடிக்கிறார் என்ற தவறான தகவலை பரப்பி வருவதை கண்டனம் தெரிவித்து, டிராஃபிக் ராமசாமி படத்தில் சீமானுடன் நடிக்கவிருக்கும் செய்தி உண்மைதான். ஆனால் தனித் தனியாக சிறப்பு தோற்றங்களில் நடிக்கின்றோம். தவறான செய்திகளை வெளியிடவேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார் குஷ்பு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,713.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



