02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, தர்மதுரை ஆகிய படங்களில் நடித்தன் மூலம் பிரபலமானவர். வித்தியாசமான கதாபத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் திரைப்படத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு இடமில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: தமிழ் திரைப்படத்தில் தமிழ் நடிகைகளுக்கு மதிப்பே இல்லை. தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகைகள் முதலில் எத்தனை பேர் இருக்கிறார்கள். ஹிந்தி மற்றும் மலையாள திரைப்படக்களில் அந்த மாநில நடிகைகள் நடிக்கிறார்கள். ஆனால் தமிழில் மட்டும்தான் தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகைகள் நடிப்பதில்லை. தமிழக திரைத் துறையினர் நடிக்க வரும் தமிழ்ப் பெண்களுக்கு கூடுதல் மதிப்பளிக்கத் தொடங்கினால்தான் தமிழ்த் திரைக்கு தமிழ்ப் பெண்கள் வருவார்கள் என்று தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,852.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



