Show all

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம்! விஜய் தெலைக்காட்சி அலுவலகத்துக்கு காவல்துறை பாதுகாப்பு

21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழக மக்களின் பெரும் வரவேற்பை அடுத்து, பிக்பாஸ் பருவம்2 ஒளிபரப்பாகி வருகிறது. 

கடந்த முறை ஹிந்து மக்கள் கட்சியினர் பிக்பாஸ்க்கு எதிராக போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில் இந்த முறையும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தடை செய்ய வலியுறுத்தி ஹிந்து மக்கள் கட்சியினர், நிகழ்ச்சியை ஒளிபரப்பும் விஜய் தொலைக்காட்சி அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 30க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். 

இதனால் விஜய் தொலைக்காட்சி அலுவலகத்துக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,839.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.