Show all

அடுத்த வெள்ளியன்று திரைக்கு வருகிறது! சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம்

ஜான்சன்.கே இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் வெளியீட்டு நாளை படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த வெள்ளிக் கிழமையாம். அந்த நாளின் சிறப்பு என்ன தெரியுமா?

21,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இயக்குநர் ஜான்சன்.கே இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஏ1. இத்திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் ஜான்சன்.கே இயக்கத்தில் மீண்டும் இணைந்தார் நடிகர் சந்தானம். 

பாரிஸ் ஜெயராஜ் என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சந்தானத்துக்கு கதைத்தலைவியாக அனைகா சோடி, சஷ்டிகா ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு ஆர்தர் கே.வில்சன் ஒளிப்பதிவாளராகவும், பிரகாஷ் பாபு படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். 

ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் வெளியீட்டு நாளை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி காதலர் நாளையொட்டி அடுத்த வெள்ளிக்கிழமையன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.