காதலித்தது தப்பில்லை. காதலித்த ஆளும் காதலித்த இடமும் தப்பாகிப் போனாலும், ஈழப்பெண் என்பதால் துணிச்சலாக கலைத்துறையில் வலம் வந்துகொண்டிருந்தார் லாஸ்லியா. நாடு அளவில் மகளைப் பிரிந்திருந்த தந்தை மரியநேசன் தமிழர் கண்ட முதற்பொருட்கள் ‘இடம், காலத்தில்’ இடம் பிரிந்து காலமாகிப் போனார். 01,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: கடந்த ஆண்டு விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் பருவம் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் லாஸ்லியா மரியநேசன். இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பேரறிமுகமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா பங்கேற்றிருந்த போது- ஒரு பக்கம் அப்பா சாயலில் இருந்த சேரன் மீது பாசம், மன்றொரு பக்கம் மனம் கவர்ந்து விட்ட கவினுடன் காதல் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியை அழகிய கவிதையாக்கினார் லாஸ்லியா. தங்களின் குடும்பத்திற்காக கடந்த 10 ஆண்டுகள் தங்களை விட்டு பிரிந்து கனடாவில் பணிபுரிந்து வருவதாக கூறி தனது அப்பா மீது கொண்ட அன்பை பலமுறை வெளிப்படுத்தியுள்ளார் லாஸ்லியா. 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது பிக்பாஸ் வீட்டில் வைத்து தனது அப்பாவை சந்தித்தார் லாஸ்லியா. அப்போது அவரது அப்பாவை பார்த்து லாஸ்லியா கதறி அழுதது பெரும் தீயானது. அந்தக் காட்சி இன்னமும் பலரது கண்களைவிட்டு மறையவில்லை. இந்நிலையில் லாஸ்லியாவின் அப்பா திடீரென காலமாகியுள்ளார். அவரது இறப்பை இலங்கை ஊடகங்களும் உறுதி படுத்தியுள்ளன. லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்த தகவலைகேட்ட அவரது கொண்டாடிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் பலரும் லாஸ்லியாவுக்கு ஆறுதல் கூறி தலைப்பாகி வருகிறது. அப்பா மீது மிகுந்த பாசம் கொண்ட லாஸ்லியா இந்த இழப்பை எப்படி தாங்கிக் கொள்ள போகிறார் என வேதனை தெரிவித்து வருகின்றனர். பலரும் லாஸ்வியாவின் தந்தை மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.