தமிழ் திரைவானில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளராக இருக்கும் ஜெய ஆகாஷ், கொண்டாடிகள் வீட்டிலேயே படம் பார்ப்பதற்காக புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். 04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ் திரையுலகில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருப்பவர் ஜெய் ஆகாஷ். இவர் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது ‘அடங்காத காளை’ என்னும் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து, இயக்கி வருகிறார். கொரோனா பாதிப்பில் திரையரங்கம் சாத்தியமில்லாத நிலையில் எதிர்காலத்திற்கும் உதவும் புதிய முயற்சியாக செல்பேசியிலேயே படம் பார்த்துக் கொள்ள ஜெய் ஆகாஷ் செல்பேசி செயலி ஒன்றை வடிவமைத்துள்ளார். இது குறித்து ஜெய் ஆகாஷ் கூறும்போது, தற்போது “அடங்காத காளை” படத்தை நடித்து, தயாரித்து இயக்கியுள்ளேன். இப்படத்தில் எனக்கு அப்பா மகன் என இரு வேடங்கள். அப்பா ஒரு காவல்துறை அதிகாரி ஆனால் கெட்டவர். மகன் மென்பொருள் பொறிஞர் அவன் கெட்டவனா? நல்லவனா? என்பது கமுக்;கம். கதைத்தலைவிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா, குஷி ஆகியோர் நடித்துள்ளார்கள். அப்பா வேடத்திற்கு தலைவியாக தொலைக்காட்சி நடிகை தேவி கிருபா நடிக்கிறார். இப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வருகிறது. தற்போது இந்த படத்தை செல்பேசியில் வெளியிட ஒரு புதிய செயலி ஒன்றை வடிவமைத்துள்ளோம். இந்தச் செயலி கொண்டாடிகள் படம் பார்க்க மிகச்சிறந்த, எளிய வழியாக இருக்கும். நாளை எனது பிறந்த நாளன்று ஏக்யூப் செயலியை வெளியிடுகிறோம். இந்தச் செயலியை அனைவரும் தங்கள் செல்பேசியில் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். இந்தச் செயலியில் ஒவ்வொரு கிழமையும் ஒரு படத்தை வெளியிடவுள்ளோம். முதல் படமாக எனது “அடங்காத காளை” படம் வெளியாகிறது. எனது அடுத்த படம் “புதிய மனிதன்” தெலுங்கில் “கொத்தகா உன்னாடு” என்றும் வரும் படம் இந்தச் செயலியில் அடுத்து வெளியாகும். வேறு பல தயாரிப்பாளர்களும் தங்களது படத்தை இந்த செயலியில் வெளியிட விருப்பம் தெரிவித்துள்ளார்கள். மிக குறைந்த கட்டணத்தில் குடும்பம் மொத்தமும் பார்க்க முடியும். அனைவரும் மிக எளிதான வழியில் படம் பார்க்க ஒரு மிகச்சிறந்த செயலியாக இருக்கும்’ என்றார்.
50 ரூபாய் கட்டி இந்த செயலியில் இரண்டு நாட்கள் வரை பார்த்து கொள்ளலாம். நீங்கள் பார்த்த பிறகு அந்த இரண்டு நாட்களில் வேறு எவர் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



