கடந்த முறை மீனாவின் வளைகாப்பு சிறப்பு நிகழ்ச்சி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக முன்னெடுக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு பல்சுவை விருந்தாக அமைந்தது. இதனால் இந்தமுறை மீனா ஜீவா இணையரின் குழந்தைக்கு பெயர் சூட்டும் மூன்று மணிநேர சிறப்பு நிகழ்ச்சி அறிவிப்பு பார்வைகளுக்கு தேனாய் இனித்து நேற்றைய நாளை எதிர்பார்த்து காத்திருக்க வைத்திருந்தது. 09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் குடும்ப பாங்கான தொடர் மிகச்சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதில் முல்லை, கதிர் இணையரின் தொட்டும் தொடாத, பட்டும் படாத பார்வைகளும், பேச்சுக்களும் பார்வையாளர்களை மகிழவைக்கும் நல்ல கவிதைகள். கடந்த முறை மீனாவின் வளைகாப்பு சிறப்பு நிகழ்ச்சி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக முன்னெடுக்கப்பட்டு பார்வையாளர்களுக்குப் பல்சுவை விருந்தாக அமைந்தது. இதனால் இந்தமுறை மீனா ஜீவா இணையரின் குழந்தைக்கு பெயர் சூட்டும் மூன்று மணிநேர சிறப்பு நிகழ்ச்சி அறிவிப்பு பார்வைகளுக்குத் தேனாய் இனித்து நேற்றைய நாளை எதிர்பார்த்து காத்திருக்க வைத்திருந்தது. ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் எதிர்பார்த்திருந்ததைப் போல ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் அமைக்கப்படவில்லை. ஆனால் ஒரு நல்ல குறும்படம் போல மூன்று மணி நேரம் (இல்லையில்லை விளம்பரம் ஒரு மணிநேரம் போக இரண்டு மணிநேரத்தில்) நிகழ்ச்சி சிறப்பாகவே அமைந்திருந்தது. வேடிக்கை என்னவென்றால் குழந்;தைக்கு என்ன பெயர் வைப்பது என்று யாரும் திட்டமிட்டிருக்க வில்லை. இந்த இரண்டு மணி நேரத்தில் அரைமணி நேரத்திற்கு மேலாக பெயர் தேர்வு குறித்த விவாதம் நல்ல கலகலப்பு. மீனாவுக்கு நவீனமாக, பொருள் விளங்காத, வடமொழி எழுத்து கலந்து பெயர் வைக்கவேண்டும் என்று விருப்பம். அதற்கு அவரின் அப்பா எண்கணித சோதிடரின் பரிந்துரை என்றெல்லாம் வக்காலத்து வாங்கி ஒருவழியாக மீனாவிற்கு பெயர் வைக்க அனுமதி வாங்கிக் கொடுத்தார். மீனா என்னடாவென்றால் சாமிஜா என்ற ஒரு பெயரை முன்மொழிகிறார். முல்லை அத்தாச்சி என்று அழைக்கும், தனத்தின் அண்ணி சாமியானாவா என்று கிண்டல் அடிக்கிறார். பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் அனைவருக்கும் அப்பா பாண்டியனின் பெயரோ, பாண்டியன் பெயரின் எழுத்தோ குழந்தை பெயரில் இடம் பெற வேண்டும் என்று ஆசை. அப்படியானால் பாண்டியம்மா என்று வைக்கலாமே என்று அந்த விட்டின் கடைக்குட்டி கண்ணன் முன்மொழிய மீனா செம காண்டாகி விடுகிறார். ஆனால் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் பாண்டியம்மா என்று வைத்துக் கொண்டால் என்ன என்றே நினைக்கின்றார்கள். அதுவும் மீனாவின் மாமியாருக்கு மிகவும் அந்தப் பெயர் பிடித்திருக்கிறது. கடைசியில் குலுக்கல் முறையில் பெயர் தேர்வு செய்யும்போதும் ஒரு அதிரடி. பக்கத்து வீட்டுக் குழந்தை இரண்டு சீட்டுக்களை எடுத்துக் கொடுக்க தனம் அதை ஆர்வமாக பறித்து சீட்டில் உள்ள பெயரைப் படிக்கலாம் என்று பார்த்தால் குழந்தை எடுத்துக் கொடுத்திருப்பது இரண்டு சீட்டுக்கள். சீக்கிரம்படி, சிக்கிரம்படி அனைவரின் ஆர்வத் தூண்;டல்கள். ஒரு சீட்டைப்பிரித்துப் பார்த்தால் அதில் பாண்டியம்மாவே இருக்கிறது. தனம் அவசர அவசரமாக இன்னொரு சீட்டைப்பிரித்துப் பார்க்க நல்லவேளையாக யாரும் மறுப்பு சொல்ல முடியாமல், அழகிய தமிழ்ப் பெயராக இருக்க, அந்த பெயர் எழுதியது நான்தான் என்று மீனாவின் பாட்டி வேறு சொல்லி விடுகிறார். கடைசியில் ‘கயல்விழி’ என்கிற அந்தப் பெயரை எழுதியிருந்தது மீனாவின் பாட்டியில்லையாம். கதிர்தான் எழுதியிருந்தாராம். கயல்விழி என்கிற பெயர் குழந்தையின் அப்பாவும், மீனாவின் கணவனும் ஆன ஜீவாவிற்கு மிகவும் பிடிக்கும் என்று அந்தப் பெயரை ஜீவாவின் தம்பி கதிர் எழுதியிருந்தாராம். கயல்விழி பெயர் தனக்கு பிடிக்கும் என்று கதிர் முல்லையிடம் சொல்லியிருந்த நிலையில், அந்தப் பெயர் அண்ணன் ஜீவாவிற்கு பிடித்த பெயர் என்று தெரிய வந்த நிலையில், இதை வைத்து முல்லையும், கதிரும்- பார்வையாளர்களை மகிழவைக்கும் தொட்டும் தொடாத, பட்டும் படாத பார்வைகளும், பேச்சுக்களும் ஆன நல்ல கவிதைகளை வடிக்கத் தவறவில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



