விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துவருகிறார். படம் தீபாவளி அன்று வெளியாகத் தயாராகி வருகிறது. மெர்சல் என்ற சொல் அதிகம் பிரபலமாகியுள்ள நிலையில், தேனாண்டாள் நிறுவனம் ‘மெர்சல்’ பெயருக்கு வணிகமுத்திரை வாங்கியுள்ளது. அதனால் இனி இந்தப் பெயரை யாரேனும் பயன்படுத்தினால் அதில் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை உரிமத் தொகையாகச் செலுத்தவேண்டும். தென்னிந்தியாவில் ஒரு திரைப்படத்தின் பெயருக்கு இப்படி வணிகமுத்திரை பெறப்படுவது இதுவே முதல் முறை. சமீபத்தில் கீச்சு நிறுவனம் மெர்சல் படத்திற்காக விஜய் உருவ அலையோவியம் வெளியிட்டதும், வணிகமுத்திரை வாங்குதல் பெருமையை பெற்ற முதல் தமிழ் படம் மெர்சல் என்பதும் குறிப்பிடத்தக்கன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



