Show all

சித்ராதேவிபிரியாவின் கலைஆர்வம் போன்றதா! சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடிப்பு-தயாரிப்பு? படம் வெளியாகும் போது தெரியும்

இருநூறுக்கும் மேற்பட்ட படக்குழுவினர் அனைவருக்கும் பாரம்பரிய முறையில்- நடிகர், தயாரிப்பாளர், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் பொங்கல் பரிசு வழங்கி பொங்கலைக் கொண்டாடியது பாராட்டிற்குரியதே.

13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தங்கள் கடைக்கான விளம்பரங்களில் புகழ்தளத்தில் உலாவரும் நடிகைகளோடு அவரே நடனமாடி வந்தவர்தான் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள்.
தற்போது சரவணன் அருள் தயாரித்து நடிக்கும், பொருட்செலவு மிக்க  படத்தை இயக்குனர்கள் ஜேடி ரூ ஜெர்ரி இயக்குகிறார்கள்.

முதற்கட்ட படப்பிடிப்பாக, கலை இயக்குனர் எஸ்.எஸ் மூர்த்தியின் அமைப்பில் உருவான அசத்தலான அரங்கில் இப்படத்திற்கான பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. நடன இயக்குனர் பிருந்தாவின் அமைப்பில், நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடன கலைஞர்களுடன் இணைந்து பாடல் எடுக்கப்பட்டுள்ளது. மிகவும் நளினமாக, அருமையாக நடனமாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் சரவணன் என்று சொல்லப்பட்டு வருகிறது.

மேலும் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட சிறப்பாக அமைக்கப்பட்ட அரங்கத்தில் சண்டை காட்சி அமைப்பாளர் அனல் அரசுவின் இயக்கத்தில், அதிரடியான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. நடனத்தைத் தொடர்ந்து, சண்டை காட்சிகளிலும் அபாரமாக நடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவரது அர்ப்பணிப்பையும், ஈடுபாட்டையும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் வியந்து பாராட்டியதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் விளம்பரப்படத்தில் அவர் நடிக்கும் போதே கடுமையான கிண்டலுக்கு உள்ளாவார். காட்சியமைப்பு மிகவும் செயற்கையாக இருக்கும். ஆல்இன்ஆல் அழகுராஜா என்ற படத்தில் கதைத்தலைவி காஜலின் சித்ராதேவிப்பிரியா வேடத்தின் கலைத்தாகம் போன்றது சரவணன் கலைத்தாகம் என்று பொதுமக்களால் பகடியாடப்பட்டு வருவார் சரவணன் அருள். அந்தப்படத்தின் உச்சகட்டத்தில்தான் சித்ராதேவிப்பிரியாவின் ஆர்வக்கோளாறு அவருக்கு உணர்த்தப்படும். சரவணன் நிலை என்ன என்பதை படம் வெளியாகி மக்களின் மதிப்பீட்டில் தான் உண்மை நிலவரம் தெரியவரும்.

இந்த நிலையில், தமிழர் திருநாளைக் கொண்டாடும் விதமாக 200 மேற்பட்ட படக்குழுவினர் அனைவருக்கும் பாரம்பரிய முறையில் சரவணன் பொங்கல் பரிசு வழங்கி பொங்கலைக் கொண்டாடியது பாராட்டிற்குரியதே.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.