நேற்றைய 89வது நாள் பிக்பாஸ் நிகழ்ச்சியில், நட்புக்குள் காதல் கலகம் செய்தது. அதில், சாண்டியிடம் பேசும் லாஸ்லியா, கவின் உன் நண்பன் தானே அவன் வெற்றியை குறித்து உனக்கு அக்கறை இல்லையா? அவனுக்கு நீ ஏன் குறைவான மதிப்பெண் கொடுத்தாய் என்று சண்டையிடுகிறார். பிக்பாஸ் வீட்டில் இந்தக் கிழமை நடைபெறும் ஒன்பது வேலைப்போட்டிகளில் யார் அதிக மதிபெண்கள் எடுக்கிறார்களோ அந்தப் போட்டியாளர் நேரடியாக இறுதி சுற்றிற்கு தேர்ந்தெடுக்கப்படுவார். இந்நிலையில், நேற்றைய 89வது நாள் நிகழ்ச்சியில், நட்புக்குள் காதல் கலகம் செய்தது. அதில், சாண்டியிடம் பேசும் லாஸ்லியா, கவின் உன் நண்பன் தானே அவன் வெற்றியை குறித்து உனக்கு அக்கறை இல்லையா? அவனுக்கு நீ ஏன் குறைவான மதிப்பெண் கொடுத்தாய் என்று சண்டையிடுகிறார். முன்னதாக நேற்று நடைபெற்ற வேலைப்போட்டியின் போது சாண்டி தவறுதலாக லாஸ்லியாவை கீழே விழச்செய்ததால், அதனைக் கண்ட கவின் சாண்டியிடம் சண்டையிட்டார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,282.
04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நூறு நாள் போட்டி நிகழ்ச்சி பிக்பாஸ் மூன்றாவது பருவம் நிறைவை எட்டியுள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி நேற்று 89 நாளாக ஒளிபரப்பானது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



