09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அண்மையில் விஜய் குறித்து இரண்டு புத்தகங்கள் வெளியாகின. இந்த இரண்டு புத்தகங்களும் அமேசான் இயங்கலை நிறுவனம் மூலம் விற்பனைக்கு வந்த நிலையில் ஐகான் ஆப் மில்லியன்ஸ் என்ற புத்தகம் அமேசானில் ஒருசில நாட்களில் விற்று தீர்ந்து இருப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இந்த அளவுக்கு மிக வேகமாக இந்தப் புத்தகம் விற்பனையாக கீச்சுவில் விஜய் ரசிகர்கள் செய்த விளம்பரமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் புத்தகத்தை அண்மையில் படித்த விஜய், இந்த புத்தகத்தை எழுதிய ரசிக எழுத்தாளர் நிவாசை பேசியில் அழைத்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தாராம். மேலும் தான் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது மிகவும் நெகிழ்ச்சி அடைந்ததாகவும், தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் விஜய் தெரிவித்தாராம். விஜய்யின் பேசிஅழைப்பு வந்ததில் இருந்து நிவாஸ் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கின்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,735
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



