22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தால் பகிர்மானர்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை திருப்பி தர தனுஷ் சம்மதித்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படம் வெளியான 3வது நாளிலேயே பல திரையரங்குகளில் காத்து வாங்கியது. எனவே, இப்படம் ஒரு தோல்விப்படம் என சிலரும், இல்லை இது வெற்றிப்படமே என சிலரும் கருத்து கூறி வந்தனர். இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால், படத்தை வாங்கியவர்கள், நட்டத்தை ஏற்கும்படி தனுஷிடம் வலியுறுத்தியுள்ளனர். எனவே, ரூ.40 கோடி நட்டத்தை அவர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதன் மூலம் காலா ஒரு தோல்விப்படம் என்பது உறுதியாகியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,840.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



