தளபதி 63 என்ற தலைப்பில் உருவாகி வந்த, விஜய்யின் 63வது படத்தின் முதல் பார்வை சுவரொட்டி இன்று வெளியிடப்பட்டு விஜய் இரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது. 06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் விஜய்யின் 63வது படம் தளபதி 63. இந்தப் பெயரில் படம் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்தப் படத்திற்கு பிகில் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி உள்ள பிகில் படத்தின் முதல்பார்வை இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். முதல்பார்வை சுவரொட்டி வெளியான சில நிமிடங்களிலேயே 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதற்கு கீச்சுவில் விரும்பம் தெரிவித்துள்ளர். 27ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதல்பார்வை சுவரொட்டியை பகிர்வு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து நாளை நள்ளிரவு 12 மணிக்கு மற்றொரு சுவரொட்டி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,190.
இந்தப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பதே அவரது ரசிகர்ளுக்கு உற்சாகம் அளிப்பதாகும். கறிக்கடையில் காவி வேட்டியில் அப்பாவாக அமர்ந்திருக்கும் ஒரு விஜய்யும் கையில் பந்துடன் சிவப்பு நிற பனியனுடன் இளம்அகவையில் ஒரு விஜய்யும் உள்ளனர் முதல்பார்வை சுவரொட்டியில்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.