10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று விஜய்யின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பிட்ட சில திரையரங்குகளில் அவரது படங்கள் திரையிடப்பட்டன. சாலைகளில் பெரும்பாலான இடங்களில் அவருக்கு பதாகை மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. இதில் சில பதாகை மற்றும் சுவரொட்டிகளில் நாளைய முதல்வரே என்றும், தமிழ்நாட்டை காக்க வா தளபதி என்றும் சூசகமாக ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைத்துள்ளனர். இந்நிலையில், சாலையில் ஒரு இடத்தில் ரசிகர்கள் வைத்த பதாகையில் 'ஆளப்போறான் தமிழன்' என்பதற்கு பதிலாக 'அழப்போரன் தமிழன்' என்ற அச்சடித்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாகப் பரவி வருகிறது. இதனை பார்த்த இணையப் ஆர்வலர்கள் இந்தப் புகைப்படத்தை கலாய்த்து வருகின்றனர். அழப்போறான் தமிழன்! ஆம் விஜய் ரசிகர்கள் சொன்னது சரிதான். நேற்று 13உயிர்களை இழந்து அழுதோம். இன்று வேளாண்மையையும் வனத்தையும் அழிக்கும் 8வழிச் சாலை வேண்டாம் என்று அழுது கொண்டிருக்கிறோம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,828.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



