Show all

நலங்குத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உறுதி! விவேக் மாரடைப்புக்கு, கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல

ஒரே நாளில் மாரடைப்பு ஏற்படாது என்றும், விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டத்தற்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும் தொடர்பு இல்லை என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார் நலங்குத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன்
 
03,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: நலங்குத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் கூறுகையில் நடிகர் விவேக்கிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது வேதனையை ஏற்படுத்துகிறது என்று வருத்தம் தெரிவித்தார்.

மாரடைப்பு என்பது ஒரு நாளில் ஏற்படாது என மருத்துவர்கள் கூறினர்கள் என்றும், விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டத்தற்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும் தொடர்பு இல்லை என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார் நலங்குத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன்

நடிகர் விவேக்கின் உடல்நிலை தற்போதைக்கு மோசமான நிலையில்தான் உள்ளது. அவருக்கு கொரோனா பரிசோதனை, சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுவிட்டது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை. விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டத்தற்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும் தொடர்பு இல்லை. தடுப்பூசி நடிகர் விவேக்கும் கோவாக்சின் தடுப்பூசிதான் செலுத்திக் கொண்டார். தமிழகத்தில் 5.88 லட்சம் பேர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 

இதய நோய், குருதி அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட இதர நோய்கள் உள்ளவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். சிறுவர்கள் கர்ப்பிணிகள், 18 அகவைக்குட்பட்ட சிறுவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள கூடாது. அது போல் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள கூடாது. மக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.