Show all

பிக்பாஸ் ஓர் அலசல்!

கமல் தொகுத்து வழங்கும் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக் காட்சிகள் மூன்று பருவங்களை விடவும் திறமையான போட்டியாளர்களை கொண்டிருப்பதாக உணர முடிகிறது. 

19,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: நேற்று மாலை ஆறு மணிக்குத் தொடங்கியது கமல் தொகுத்து வழங்கும் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி. 

அனைத்து ஊடங்களும் தவறாமல் கருத்தாடல் நடத்தும் மாபெரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இன்னும் நூறு நாட்கள் இந்த நிகழ்ச்சியை வைத்து விஜய் தொலைக்காட்சி மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து ஊடகங்களும் பார்வையாளர் பார்வை மதிப்பெண்ணுக்கு போட்டி போடுவதற்கு நல்லதொரு வாய்ப்பே. 

துடுப்பாட்டத்திற்கு அறிவாளர்கள் நடுவே ஒரு எதிர்மறை திறனாய்வு இருப்பது போலவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் கால விரயம், வேலையில்லாதவங்க பாக்கறது என்கிற திறனாய்வு உண்டு. 

இந்த நிகழ்ச்சியைப் பற்றிய அலசல்கள், காணொளிகள், கருத்துப்படங்கள், முகநூல் பதிவுகள், கீச்சுக்கள் என்று கடந்த பருவங்களில் நிகழ்ந்த அனைத்தும் வரப் போகும் நூறு நாள்களில் களைகட்டத்தான் போகின்றன.

இந்த நிகழ்ச்சியில் வரும் மனிதர்களின் எதிர்மறையான பாடுகள் படப்பிடிப்புக் கருவி வழியாக அம்பலப்படும் போது அது நம்முள் இருக்கிற எதிர்மறைகளையும் அழுக்குகளையும் பிரதிபலிக்கிறது. அவ்வாறு நீயும் இருக்காதே என்று எச்சரிக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி என்று நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கருத்து வெளிப்படுத்தப் படுகிறது.

திரையரங்குகள் ஒருபக்கம் மூடப்பட்டிருக்கின்றன. பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கின்றனர். வீட்டிலிருந்தே வேலை செய்கிற காரணம் பற்றியும், கொரோனா அச்சம் பற்றியும். இந்த நிலையில் எண்ணிமத் தளங்களில் வெளியாகும் தரமான தொடர்களும் திரைப்படங்களும் ஆறுதலாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ஐபிஎல் கொண்டாட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் அவை பெரும்பாலும் துடுப்பாட்டம் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமான பொழுதுபோக்கே.

இந்தச் சூழலில், சாமானிய மக்களின் பொழுதுபொக்கு வடிகாலாக ‘பிக்பாஸ்’ தமிழ் பருவம் நான்கு வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

போட்டியாளர்கள் செய்யும் பிழைகளை சாக்கு வைத்து காரசாரமான, பகடியாடல்களை நிகழ்த்துவார் கமல். இந்திய அரசியலில் பல்வேறு கலாட்டாக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய சூழல் கமலுக்கு அல்வா சாப்பிடுவது போல இருக்கும். எனவே இந்த பருவத்திலும் அவரது அரசியல் பகடிகளும், அதே சமயத்தில் சமூக விழிப்புணர்வு தொடர்பான அக்கறையும் முன்னெடுக்கப்படும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பதினாறு போட்டியாளர்கள்:
1.சின்னத்திரை இரம்யா பாண்டியன், 2.நடிகை ரேகா, 3.பாடகர் வேல்முருகன், 4.சின்னத்திரை ரியோ 5. சனம் செட்டி, 6.பாலா, 7.அனிதா சம்பத், 8.சிவானி, 9.ஜித்தன் ரமேஷ், 10.ஆரிஅர்ஜுனன், 11.சாம், 12.கேப்ரில்லா, 13.அறந்தாங்கி நிஷா, 14.சம்யுக்தா, 15.சுரேஷ் சக்ரவர்த்தி, 16.பாடகர் ஆஜித் ஆகியோர் ஆக எட்டு பெண் போட்டியாளர்கள். எட்டு ஆண் போட்டியாளர்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.