பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியுள்ளாராம் சல்மான்கான். 15,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: ஹிந்தித் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளம் குறித்த தகவல் வெளியாகி, அம்மாடியோவ் என்று நம்மை வியக்க வைக்கிறது. தொலைக்காட்சிகளில் தமிழ், தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. தமிழ், தெலுங்கில் 3 பருவங்கள் முடிந்து 4-வது பருவம் தொடங்க உள்ளது. இவற்றை முறையே கமல்ஹாசன், நாகார்ஜுனா தொகுத்து வழங்க இருக்கிறார்கள். ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14-வது பருவத்தை நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். அவருக்கு ரூ.250 கோடி சம்பளம் பேசி உள்ளனர். ஒரு நாள் படப்பிடிப்புக்கு மட்டும் அவருக்கு சம்பளமாக ரூ.20 கோடியே 50 லட்சம் நிர்ணயித்து உள்ளார். ஒரு நாள் படப்பிடிப்பில் 2 அத்தியாயங்கள் எடுக்க திட்டமிட்டு உள்ளனர். பிக்பாஸ் 4-வது பருவம் முதல் 6-வது பருவம் வரை ஒரு நாள் சம்பளமாக ரூ.2 கோடியே 50 லட்சம் வாங்கினார். 7-வது பருவத்தில் இது ரூ.5 கோடி ஆனது. பிறகு எட்டு கோடியாகவும் பின்னர் ரூ.11 கோடியாகவும் உயர்த்தினார். தற்போது ஒரு நாள் சம்பளம் ரூ.20 கோடியே 50 லட்சமாக உயர்த்தி உள்ளார். கொரோனா ஊரடங்கில் திரையுலகம் முடங்கிய நிலையிலும் சல்மான்கான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வஞ்சனையில்லாமல் சம்மாதிப்பது பாமர மக்களை வியப்பில் ஆழ்த்தும் நடப்பாகும். ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்க சல்மான்கான் ரூ.40 கோடியில் இருந்து ரூ.50 கோடி வரை வாங்குகிறார். படத்தின் வசூலிலும் அவருக்கு பங்கு கொடுக்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



