13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பின்பு ஹிந்தி திரையுலகம் வரை சென்று தன் காலடியைப் பதித்தவர். ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். மரண செய்தியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. ரஜினி, கமல் போன்ற தமிழின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீதேவி. அவர் நடித்த 16 வயதினிலே, மூன்றாம் பிறை போன்றவை முதன்மையயான படங்கள். திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தின் மூலம் மீண்டும் திரையலகில் நுழைந்தார். ஆனார். பத்மஸ்ரீ, ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார். அவருடைய மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திரையுலகுக்கு மிகப்பெரும் இழப்பாகும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,709
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



