விஜய்யின் அறுபத்தி நான்காவது படமான மாஸ்டரைத் தொடர்ந்து 65, 66களின் கலக்கல் அறிவிப்புகள் வெளியாகி கொண்டாடிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. 01,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விஜய்யின் அறுபத்தி நான்காவது திரைப்படமான ‘மாஸ்டர்’ திரைப்படம் கொண்டாடிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்திருக்கும் நிலையில் அடுத்ததாக விஜய்யின் அறுபத்தி ஐந்தாவது திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். இத்திரைப்படத்தின் தொடக்கநிலைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. நடிகை பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் விஜய்க்கு கதைத்தலைவியாக நடிக்க இருப்பதாகவும், அருண் விஜய் வில்லனாக நடிக்க இருப்பதாகவும், பூவையார் மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்க இருப்பதாகவும், யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் படக்குழு இதை உறுதிப்படுத்தவில்லை. இதனிடையே விஜய்யின் 66-வது படம் குறித்த தகவல்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. நடிகர் விஜய்யின் 66-வது படத்தை இயக்க நான்கு இயக்குனர்களிடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, விஜய்யின் 66-வது படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இந்நிறுவனம் ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்திருந்தது. அதேபோல் இப்படத்தை இயக்குவதற்காக லோகேஷ் கனகராஜ், எச்.வினோத், அட்லீ, அஜய் ஞானமுத்து ஆகிய நான்கு இயக்குனர்களிடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.