Show all

தாயின் அருமைகுறித்து தாயார் பாடினார்! அன்னையர் நாளில் ராகவா லாரன்ஸ் தொடங்கிய, தாய் அமைப்பு தொடக்கவிழாவில்

நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சில ஆண்;டுகளுக்கு முன் தன் தாயின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் கட்டினார். தற்போது தாய் என்கிற அமைப்பைத் தொடங்கியுள்ளார்.
 

30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தாய் என்ற அமைப்பை தொடங்கியிருக்கும் ராகவா லாரன்ஸ், அதற்கான விழாவில் அவரது தாயாரையே பாட வைத்தது பலராலும் பாராட்டப் பட்டு வருகிறது.

நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சில ஆண்;டுகளுக்கு முன் தன் தாயின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் கட்டினார். தற்போது தாய் என்கிற அமைப்பைத் தொடங்கியுள்ளார்.

தங்கள் பெற்றோர்களை யாரும் விட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இனி எந்த ஒரு தாய் தந்தையும் முதியோர் இல்லத்திற்குச் சென்று விட கூடாது என்ற கருத்தில் ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். 

அன்னையர் நாளை முன்னிட்டு இப்பாடலை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ். இவ்விழாவில் அவரது தாயாரை பாட வைத்து அழகு பார்த்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். மேலும் அடுத்த படத்தில் தன் தாயரைப் பாடவைக்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறார் லாரன்ஸ்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,151.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.