Show all

ஆங்கில ஆண்டு 2021 தனிமனித முனைப்புகளைக் கொண்டாடிய ஆண்டா! டிக்டாக் தளத்திற்கு முதலிடம்

முதன்மைப் பத்துத் தளங்களில் கூகுள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல் முறையாக டிக்-டாக் முதல் இடத்தை பிடித்துள்ளது. 

11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: அகரம் முதல் னகர மெய் வரை அனைத்தையும் கொண்டுள்ள கூகுளைப் பின்னுக்கு தள்ளி- தனிமனித முனைப்புகளைக் கொண்டாடும் டிக்டாக் தளத்திற்கு முதலிடம் தந்துள்ளனர் உலக மக்கள் முடியவிருக்கிற நடப்பு ஆங்கில ஆண்டில்.

முதன்மைப் பத்துத் தளங்களில் கூகுள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல் முறையாக டிக்-டாக் முதல் இடத்தை பிடித்துள்ளது. 

கூகுள் நிறுவனம் இரண்டாம் இடத்திலும் முகநூல் தளம் மூன்றாவது இடத்திலும் மைக்ரோசாப்ட் நான்காவது இடத்திலும் மற்றும் பெரும் பணக்காரர்கள் கொண்டாடும் ஆப்பிள் தளம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

உலகில் பல்வேறு பொருட்களை இயங்கலையில் வாங்குவதற்கு மக்கள் பயன்படுத்தும் அமேசான் தளம் இந்த வரிசையில் 6 ஆவது இடத்தில் உள்ளது. 

இந்த ஆண்டு அதிரடி தள்ளுபடியை அறிவித்த கலைத் தளமான நெட்பிளிக்ஸ் தளம் 7 ஆவது இடத்தில் உள்ளது.

கூகுள் மாதிரியே அனைத்து வகைக்கும் காணொளி கிடைக்கிற வலையொளித் தளம் 8 ஆவது இடத்தை பிடித்துள்ளது. 

பேரறிமுகங்கள் விரும்பிப் பயன்படுத்துகிற கீச்சுத்தளம் 9 ஆவது இடத்தை பிடித்துள்ளது. 

இறுதியாக சமூகக் குழுக்களுக்கு நல்ல அங்கீகாரம் தருகிற புலனத் தளம் (வாட்ஸ்ஆப்) 10 ஆவது இடத்தை பிடித்துள்ளது. 

இந்த முதன்மைப் பத்து வரிசையில் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி தனிமனித முனைப்புகளைக் கொண்டாடும் டிக்-டாக் தளம் வென்றது தான் பலருக்கும் வியப்பான ஒன்றாக இருந்து வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,109.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.