Show all

போன மச்சான் திரும்பி வந்தான் புதுமணத்தோட! இந்த சொலவடைக்குப் பொருந்தும் வகையான அனுமதி

இந்திய ஒன்றிய பாஜக அரசு, சீன நிறுவனங்களுக்கான கதவை திறந்துள்ளது. இந்திய முதலீட்டுச் சந்தையில் தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 80 ரூபாய் வரையில் சரியக்  காத்திருக்கும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: சீன வளர்ச்சியில் நாம் பாதிக்கப்பட்டு விட்டோம், என்பதாகக் கருதி இந்தியா, அமெரிக்க பல்வேறு நாடுகளும் சீன நிறுவனங்களுக்கும், சீனாவுக்குத் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் கடுமையான தடை விதித்தன.

இந்த நிலையில், இந்திய ஒன்றிய பாஜக அரசு சீன நிறுவனங்களுக்கான கதவை திறந்துள்ளது. இந்திய முதலீட்டுச் சந்தையில் தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 80 ரூபாய் வரையில் சரியக்  காத்திருக்கும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

தலைமைஅமைச்சர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்டுப்பாட்டில் இருக்கும் அன்னிய முதலீட்டு அனுமதிகளில் இந்தியா சுமார் 80 சீன அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி அளித்து முதலீடு செய்ய ஒப்புதலும் கொடுத்துள்ளது என்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட வினாவிற்கு விடை கிடைத்துள்ளது.

இந்திய சீன எல்லையில் இரு நாட்டு சேனைகளுக்கும் மோதல் ஏற்பட்ட நாளில் இருந்து சீன வணிகங்களுக்கும் மற்றும் 300க்கும் அதிகமான செயலிகளுக்கும் தடை செய்தது ஒன்றிய பாஜக அரசு. இதேவேளையில் ஒன்றிய பாஜக அரசு- இந்தியா எல்லையைப் பகிரும் நாடுகளுக்கும் முதலீடுகளில் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்தியாவுடன் எல்லையைப் பகிரும் சீனா, நேபாளம், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் முதலீடுகளை நேரடியாக அனுமதிக்க முடியாது என்றும், ஒன்றிய நிதியமைச்சகத்தின் கீழ் வரும் தொழில் மற்றும் உள்நாட்டு வணிகத்தை மேம்படுத்தும் துறை அமைப்பிடம் தனியாக ஒப்புதல் பெற வேண்டும் என அறிவித்து இருந்தது.

இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பின்பு சீன மற்றும் சீன தொடர்புடைய நிறுவனங்களின் 382 முதலீட்டு விண்ணப்பங்கள் குவிந்தது. இதில் 80 விண்ணப்பங்களுக்கு கடந்த மாத இறுதியலேயே ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்டுள்ள வினாவிற்கு விடை கிடைத்துள்ளது.

இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வேகமாக வெளியேறி வரும் நிலையில் சீன முதலீடுகளின் வருகை மூலம் இந்திய ரூபாய் மதிப்பின் தொடர் சரிவில் இருந்து காப்பாற்ற முடியும். ஒன்றிய அரசின் இந்த 80 விண்ணப்பங்களின் ஒப்புதலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,302.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.