Show all

ஒரு கொண்டை ஊசியை வைத்து அழகான வீடு வாங்குவதற்குக் களமானவை! சமூக வலைதளங்களும். தொடர்முயற்சியும்

பத்தொன்பது மாதங்களுக்கு முன்பு, எனக்கான வணிகம் (டிரேட்மீ) திட்டத்தைத் தொடங்கினார் டெமி ஸ்கிப்பர். போகிற போக்கில் பல பொருட்களை பண்டமாற்று செய்துள்ளார். இதில் ஒரு இணை காதணி, ஒரு ஆப்பிள் செல்பேசி, மூன்று டிராக்டர்கள் என பல வியப்பூட்டும்  பொருட்கள் அடக்கம்.

05,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள டெமி ஸ்கிப்பருக்குத் தேவைப்பட்டது ஒரேயொரு கொண்டை ஊசி மட்டுமே.

டெமி ஸ்கிப்பர் என்கிற டிக்டாக் சமூக வலைதள பேரறிமுகம் இந்தச் சதனையை நிகழ்த்தியிருக்கின்றார். சமூகவலைதளங்களைப் பயன்படுத்தி பொருட்களை பரிமாற்றம் செய்து கடைசியில் ஒரு வீட்டைச் சொந்தமாக்கியுள்ளார்.

பத்தொன்பது மாதங்களுக்கு முன்பு, எனக்கான வணிகம் (டிரேட்மீ) திட்டத்தைத் தொடங்கினார் டெமி ஸ்கிப்பர். போகிற போக்கில் பல பொருட்களை பண்டமாற்று செய்துள்ளார். இதில் ஒரு இணை காதணி, ஒரு ஆப்பிள் செல்பேசி, மூன்று டிராக்டர்கள் என பல வியப்பூட்டும்  பொருட்கள் அடக்கம்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தைச் சேர்ந்த இந்த முப்பது அகவை டிக்டாக் பேரறிமுகம், தற்போது டென்னசி மாகாணத்தின் நாஷ்வில்லே என்கிற நகரத்தில் உள்ள ஒரு வீட்டின் உடைமையாளர்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கைல் மெக்டொனால்ட் என்பவர் இணையத்தில் ஒரு சிவப்பு நிற காகித க்ளிப்புக்கு மாற்றாக பல பொருட்களை பரிமாறம் செய்து கடைசியில் ஒரு வீட்டைப் பெற்றார். அச்செயலால் ஈர்க்கப்பட்டு, 'எனக்கான வணிகம்' திட்டத்தைத் தொடங்கினார் டெமி. முதலில் கொண்டை ஊசி கொடுத்து ஒரு விலை மலிவான ஒரு இணை காதணியைப் பெற்றார்.

அதை நான்கு மார்கரிட்டா பானத்தை அருந்தும் கண்ணாடிக் கோப்பைகளாக மாற்றினார், பிறகு காற்றழுத்த துடைப்பம் என பொருட்களை மாற்றினார். மின்கொடுப்னவு, முகநூல் சந்தை, க்ரெக்லிஸ்ட் என சரியான பொருட்களை மாற்றிக் கொள்ள பல தளங்களைப் பயன்படுத்தினார் டெமி.

முதலில் சில பொருட்கள் பரிமாற்றங்களை சான் பிரான்சிஸ்கோ நகரத்தைச் சுற்றி நேரில் சென்று மேற்கொண்டார். அடுத்தடுத்த பரிமாற்றங்களை அமெரிக்கா முழுக்க பரவலாக மேற்கொண்ட சாலை பயணங்களின்போது அவர் மேற்கொண்டார்.

அவர் பயணத்தை மேற்கொண்டே வரும் போது, மறுபக்கம் பொருள் பரிமாற்றம் குறித்து டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் காணொளிகளைப் பதிவிட்டு வந்தார். மேலும், தனக்கு எப்படி ஒரு வீட்டைப் பெறுவது தன் உச்ச இலக்காக இருக்கிறது என்றும் விளக்கினார்.

காற்றழுத்த துடைப்பத்தைக் கொடுத்து பனிச்சறுக்குப் பலகையாகவும், பிறகு அதை காதொலி கருவியாகவும், மடிக்கணினியாகவும், ஒளிக்கருவி (கேமரா)வாகவும் மாற்றினார்.

ஆப்பிள் செல்பேசியைப் பெறுவதற்கு முன் பல இணை நைக் பயிற்சி காலணிகளை பொருள் பரிமாற்றம் செய்தார். பிறகு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட டாட்ஜ் கேரவனைப் பெற்றார்.

டெமி ஸ்கிப்பரிடம் வாகனத்தை பரிமாற்றம் செய்து கொண்ட அந்த வாகனத்தின் உடைமையாளர், கேரவன் வாகனத்தை மினிசோட்டா நகரத்திலிருந்து சான் பிரான்சிஸ்கோ நகரம் வரை ஓட்டி வந்தார். இதற்கிடையில் டெமி ஸ்கிப்பரின் எனக்கான வணிகத் திட்டம் பேரறிமுகமாக, அவரைப் பின் தொடர்வோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

அந்த வாகனத்தை வைத்து சின்ன கூப்பர் (கன்வெர்டிபிள்) வாகனத்தைப் பெற்றார். இரு கிழமைகள் கழித்து அக்காரைக் கொண்டு ஒரு பதக்கமாலை நகையைப் பெற்றார். அதன் மதிப்பு 20,000 டாலர் எனக் கருதினார், ஆனால் உண்மையில் அது 2,000 டாலருக்கும் குறைவான மதிப்புடையதாக இருந்தது.

விரக்தியுடன் இரண்டு கிழமைக் கால தேடுதலுக்குப் பிறகு, டெமி ஸ்கிப்பர் அந்த நகையை ஒரு பெலொடோன் மிதிவண்டி பயிற்சி வாகனத்துக்கு பரிமாற்றம் செய்து கொண்டார். அதன் மதிப்பு 1,800 அமெரிக்க டாலர்.

பின்பு பெலொடோன் மிதிவண்டியைக் கொடுத்து மஸ்டங் வாகனம் ஒன்றைப் பெற்றார் டெமி. பிறகு அதைக் கொடுத்து ஒரு சிறிய மரத்தினாலான கேபின் வீட்டைப் பெற்றார்.

அதைக் கொடுத்து ஒரு ஹோண்டா சி.ஆர்.வி வாகனத்தைப் பெற்றார், அது மூன்று டிராக்டர்களாகவும், பின் சிபொட்லே பேரறிமுகர் அட்டையாகவும் மாறியது. அந்த அட்டை ஓராண்டு காலத்துக்கான இலவச உணவு மற்றும் ஒரு விருந்துக்கு உரியது.

அந்த அட்டையை வைத்து 50,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான இழுவை வாகனம் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் வால் எனப்படும் பிரமாண்ட மின்கலவடுக்கைப் பெற்றார்.

கடைசியாக அதை வைத்து டென்னஸி மாநிலத்தில் நாஷ்வில்லேவில் உள்ள வீட்டைப் பெற்றார். இந்த வீட்டின் மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலராக இருக்கலாம் என பேரறிமுக வலைதளங்கள் தெரிவிக்கின்றன.

டெமி ஸ்கிப்பர் தன் வீட்டை முதல்முறையாகப் பார்த்த தருணத்தை ஒரு காணொளியாக பதிவேற்றியுள்ளார். கிட்டத்தட்ட ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவர் மேற்கொண்ட பயணத்தைப் பின்தொடர்ந்தனர்.

தங்கள் புதிய வீட்டை புனரமைக்க, டெமி ஸ்கிப்பரும் அவரது கணவரும் கலிபோர்னியாவில் இருந்து, டென்னஸிக்கு நகர திட்டமிட்டனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,103.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.