Show all

இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் சுமையா? வலிமையா!

தற்போது இந்திய மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சமாக உள்ளது. ஆனால், அடுத்த ஆண்டு இந்திய மக்கள் தொகை சீன மக்கள் தொகையை முந்திவிடும் என்று, ஐநாவின் மக்கள் தொகை கணிப்பு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: ஐ.நா பொருளாதார மற்றும் சமூக பாடுகள் துறையின் மக்கள் தொகை பிரிவு, உலக மக்கள் தொகை கணிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இந்த ஆண்டு மக்கள் தொகை நாள் மைல்கல் ஆண்டாக வருகிறது. இந்த ஆண்டு நாளது 29,ஐப்பசி (நவம்பர் 15) அன்று உலக மக்கள் தொகை 800 கோடியாக உயரும் என்று தெரிவிக்கப்பட்;டுள்ளது.

அடுத்த எட்டாண்டுககளில் 850 கோடியாகவும், இருபத்தெட்டு ஆண்டுகளில் 970 கோடியாகவும் உயரக்கூடும். ஐம்பத்தெட்டு ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 1040 கோடியாக உயரும். எழுபத்தெட்டு ஆண்டுகள் வரை அதே அளவில் தொடரும் என்று தெரிவித்துள்ளது.

தற்போது இந்திய மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சமாக உள்ளது. ஆனால், அடுத்த ஆண்டு இந்திய மக்கள் தொகை சீன மக்கள் தொகையை முந்திவிடும். தற்போதைய சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சமாக உள்ளது. 

இன்னும் இருப்தெட்டு ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 166 கோடியே 80 லட்சமாக உயரும்.

மேலும், இன்னும் இருபத்தெட்டு ஆண்டு வரை உலக மக்கள் தொகையில் எவ்வளவு உயர்வு இருக்குமோ அதில் பாதிக்கும் மேல் காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், டான்சானியா ஆகிய 8 நாடுகளில் அதிகரிக்கும். 

உலக அளவில் மனிதர்களின் சராசரி வாழ்க்கைக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கீட்டின் படி 72.8 அகவையாக இருந்தது. ஆனால் அடுத்த இருபத்தெட்டு ஆண்டுகளில் 77.2 அகவையாக உயரும்.

தற்போது உலக மக்கள் தொகையில் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட அகவை உடையவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு 10 விழுக்காடாக உள்ளது. அடுத்த இருபத்தெட்டு ஆண்டில் இது 16 விழுகாடாக அதிகரிக்கும். அதாவது ஐந்து அகவைக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை போல 65 அகவை முதியவர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சில தரவுகளின் படி இந்தியாவையும் சினாவையும் ஒப்பு நோக்கினால் இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் குறைவாகவே உள்ளது. சீனாவில் ஒரு சதுரமைல் பரப்பளவில் 397 பேர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் ஒரு சதுரமைல் பரப்பளவில் இரண்டு பேர்கள்தாம் வசித்து வருகிறோம். 

சீனாவில் மக்களின் சராசரி அகவை 39 ஆக இருக்கிறது. ஆனால் இந்திய மக்களின் சராசரி அகவை 29 தானாம்.

இந்தியாவில் நகரங்களில் வசிக்கும் மக்கள் 35விழுக்காட்டினர் ஆவர். ஆனால் சீனாவில் நகரங்களில் வசிக்கும் மக்கள் 61 விழுக்காடு ஆகும்.

பொருளாதார அடிப்படையில் சீனா பல உலக நாடுகளுக்கு கடன் கொடுத்திருக்கிறது. அனால் இந்தியாவோ இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் தோராயமாக ரூபாய் 60034 கடனை சுமத்தியுள்ளது.

ஆகமொத்தம் சீனாவை ஒப்பிடும்போது, இந்தியாவில், நாட்டின் வளத்தை மக்களுக்கு பகிர்ந்து கொண்டிருக்கிற விழுக்காடு மிகக் மிகக் குறைவாக உள்ளது. இந்திய ஆட்சியாளர்களின் கார்ப்ரேட் ஆதரவு மனநிலை மாறினால்- இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் சுமை அல்ல, வலிமையே! என்கிற வரலாற்றை இந்தியா படைக்கமுடியும் என்று புரிந்;து கொள்ள முடிகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,307.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.