Show all

இந்தியாவுடன் போர் புரியவே சிறப்பு அணு ஆயுதங்கள் தயாரிப்பு – பாகிஸ்தான்

இந்தியாவுடன் போர் புரிவதற்கு என்றே சிறப்பு அணு ஆயுதங்களை, தங்கள் நாடு தயாரித்து வைத்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் அஜீஸ் சவுத்ரி கூறியுள்ளார்.

தீவிரவாத ஒழிப்புக்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கும் நிதியை அணு ஆயுத தயாரிப்புக்கு பாகிஸ்தான் பயன்படுத்துவதாக, சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், அந்நாடு அணு ஆயுத குவிப்பில் ஈடுபட்டு வருவதை, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளரே ஒப்புக் கொண்டுள்ளார். தங்கள் நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் வரும் 22ந் தேதி அமெரிக்கா செல்லும்போது அணு ஆயுதத்திற்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்ற தகவலையும் அஜீஸ் சவுத்ரி மறுத்துள்ளார்.

தங்கள் நாட்டின் அணு ஆயுத தயாரிப்பு தற்காப்பிற்காகவே என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். சமீபகாலமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய முகாம் மீது தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ராணுவத்தினர் போரை தூண்டி வரும் நிலையில், அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர் இவ்வாறு கூறியிருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.