Show all

வணக்கம் வெனிசுலா! உலகிலேயே குறைந்த விலையாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 1.48 க்கு நீங்கள் விற்கின்றீர்களாமே

இந்தியாவை விட அதிக விலைக்கு பெட்ரோல் டீசல் விற்கப்படும் நாடுகளில், அதற்கான காரணம் எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். இந்தியாவில் ஒன்றிய அரசின் அதிக வரி விதிப்பே இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு முதன்மைக் காரணம் ஆகும்.

17,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: வணக்கம் வெனிசுலா. உலகிலேயே குறைந்த விலையாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 1.48 க்கு வெனிசுலா நாட்டில் விற்கப்படுகிறது. அதற்குத்தான் வெனிசுலாவிற்கு நமது இந்த வணக்கம்.

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. அந்தவகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது நமது நாட்டு ஆட்சியாளர்களின் அறிவற்ற முன்னெடுப்பு என்பதற்கு நிறையவே தரவுகள் கிடைக்கின்றன.

ஆனால் வணக்கத்திற்கு உரிய வெனிசுலா நாட்டு ஆட்சியாளர்கள், உலகிலேயே குறைந்த விலையாக தங்கள் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 1.48 க்கு விற்று சாதனை படைத்து வருகின்றார்கள்.

உலகிலேயே அதிகபட்சமாக ஹாங்காங்கில் 1 லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ.200 க்கு விற்கப்படுகிறது. நெதர்லாந்தில் ரூ.172 ஆகவும், நார்வேவில் ரூ.170 ஆகவும், டென்மார்க்கில் ரூ.162 ஆகவும் விற்பனையாகிறது.

ஆசிய அளவில் பார்த்தால், இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஜப்பானில் ரூ.93 ஆகவும், சீனாவில் ரூ.84 ஆகவும், வங்கதேசத்தில் ரூ.77 ஆகவும், இந்தோனேசியாவில் ரூ.60 ஆகவும், இலங்கையில் ரூ.68 ஆகவும், பாகிஸ்தானில் ரூ.59 ஆகவும், மலேசியாவில் ரூ.37 ஆகவும் உள்ளது.

அதே வேளையில் உலகிலேயே மிக குறைவாக 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ  1.48 க்கு வெனிசுலா நாட்டில் விற்கப்படுகிறது. ஈரானில் 5 ரூபாய்க்கும் சிரியாவில் 17 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும் 21 நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.50 க்கும் கீழே உள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் எப்போதும் பெட்ரோலிய பொருட்கள் குறைவாகவே இருந்து வருகிறது.

நரேந்திர மோடி ஒன்றிய ஆட்சியில் முதல் முறையாக பொறுப்பேற்ற போது பெட்ரோல் மீதான கலால் வரி மூலமான வருமானம் ரூ.29,279 கோடியும், டீசல் மீதான கலால் வரி மூலமான வருமானம் ரூ.42,881 கோடியும் ஒன்றிய அரசுக்கு கிடைத்தது. இந்த நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளில் பலமுறை கலால் வரி உயர்த்தப்பட்டதன் விளைவாக தற்போது அந்த வருவாய் 300 விழுக்காட்டை உயர்த்திக் கொண்டதாக ஒன்றிய பாஜக அரசு மக்களவையில் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யும் முதன்மை நாடாக உள்ளது. ஒன்றிய அரசின் அதிக வரி விதிப்பே இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு முதன்மைக் காரணம் என்பதும், உலகிலேயே பெட்ரோல் உற்பத்தி நாடுகளை விடவும் பெட்ரோல் வணிகத்தில் அதிக வருமானம் ஈட்டும் நாடாக இந்தியா திகழ்கிறது என்பதும், ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களின் அறிவற்ற முன்னெடுப்பு என்பதற்கு நிறையவே தரவுகள் கிடைக்கின்றன. 

அதில் பெட்ரோல் டீசல் விலையேற்றம் அனைத்தின் பொருட்களின் விலையை உயர்த்தி விலைவாசி ஏற்றத்திற்கு வித்தாகும் என்பது பாஜகவின் மூடத்தன முன்னெடுப்புக்கு சிறந்த தரவாகச் சொல்லமுடியும்.

வெனிசுலாவில் முன்பு காபி மற்றும் கோகோ போன்ற வேளாண் பொருட்களே நாட்டின் ஏற்றுமதியில் முதன்மை பங்கு வகித்தன,  தற்போது உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்டிருக்கிறது வெனிசுலா. மேலும் உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகவும் உள்ளது. வெனிசுலாவின்  எண்ணெய் ஏற்றுமதியே அரசாங்க வருவாய்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய எண்ணெய் விலை வீழ்ச்சியானது வெனிசுலாவின் வெளிப்புற கடன் நெருக்கடிக்கு வழிவகுத்தது, நீண்டகால பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது, 25 ஆண்டுகளுக்கு முன்பு வறுமை விகிதம் 66 விழுக்காடாகியது. 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் விலை மீட்பு அடைந்தபோது வெனிசுலா அரசாங்கம் பின்னர் வெனிசுலாவின் பொருளாதாரத்தை வளர்த்தது, சமூக செலவினங்களை அதிகரித்து, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் வறுமை ஆகியவற்றை கணிசமாக குறைத்தது. 

இந்நாட்டிலிருந்து அதிக அளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதன்மையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,056.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.