Show all

தமிழர்தம், கார்த்திகை மாதத்து ஆரல் நாள்மீன் விளக்குத் திருவிழா வாழ்த்துக்கள்!

தமிழில் ஆரல், என்றால் நெருப்பு என்று பொருள். தமிழர் விளக்குத் திருவிழாவைப் பல ஆயிரம் ஆண்டுகளாக கார்த்திகை மாதத்து ஆரல்நாள்மீனில் கொண்டாடி வருகின்றோம். நாளை உலகத்தமிழர் கொண்டாடவிருக்கிற கார்த்திகை மாதத்து ஆரல் நாள்மீன் விளக்குத் திருவிழாவிற்கு எமது வாழ்த்துக்கள். 

02,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஞாயிற்று அடிப்படையில், தொடர்ஆண்டுக் கணக்கை 5123 ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் தமிழர் விழாக்கள் ஆண்டுதோறும் தை ஒன்று பொங்கல், ஆடி பதினெட்டு நீர்ப்பெருக்குவிழா என்று மாத நாட்களிலும், அண்மையில் நாம் கொண்டாடிய இராசராச சோழன் பிறந்த நாள் விழா ஐப்பசி மாதத்து செக்கு நாள்மீனிலும், விளக்குத் திருவிழா கார்த்திகை மாதத்து ஆரல் நாள்மீனிலும், கொண்டாடுவது வழக்கம். 

தமிழில் ஆரல், என்றால் நெருப்பு என்று பொருள். தமிழர் விளக்குத் திருவிழாவைப் பல ஆயிரம் ஆண்டுகளாக கார்த்திகை மாதத்து ஆரல் நாள்மீனில் கொண்டாடி வருகின்றோம். நாளை உலகத்தமிழர் கொண்டாடவிருக்கிற கார்த்திகை மாதத்து ஆரல் நாள்மீன் விளக்குத் திருவிழாவிற்கு எமது வாழ்த்துக்கள். 

திங்கள் ஆண்டுக் கணக்கை கொண்டாடும் பார்பனியத் திருவிழாக்கள் நிலா அடிப்படையிலான திதியை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவதாகும். 

இதிலிருந்து, நீண்ட காலமாகக் கொண்டாடப்பட்டு வரும் விழாவொன்று யாருடையது? என்கிற ஐயத்திற்கு இடமாகும் போது- தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, கோகுல அஷ்டமி போன்று அந்த விழா திதியில் கொண்டாடப்பட்டால் அது பார்பனியத் திருவிழாவென்றும், மாத நாளிலோ நாள்மீனிலோ கொண்டாடப்பட்டால் அது தமிழர் திருவிழாவென்றும் எளிதாக அறிந்துகொள்ளலாம். 

தமிழ்நாட்டில் இந்த ஆரல் நாள்மீன் திருவிழா, 2,668 அடி உயர திருவண்ணாமலை மலை உச்சியில் பேரளவான கொப்பரையில் 11 நாட்கள் எரியும் பெருவிளக்கு ஏற்றப்பட்டு கொண்டாடப்படுகிறது.

அந்த வகைக்கு பெருவிளக்கு ஏற்றப்படும் கொப்பரைக்கு இன்று அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூசை நடைபெற்றது. அதையடுத்து, கொப்பரையைக் கோவில் ஊழியர்கள் இன்று மலைக்கு எடுத்துச் சென்றனர். 

கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டும் வெளி மாவட்ட மக்கள் பெருவிளக்குக் காட்சி காணும் வகைக்குத் திருவண்ணாமலையில் கூடிட தமிழ்நாடு அரசு தடை விதித்து உள்ளது. 

திருவண்ணாமலைக்கு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையில் 50 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆரல் நாள்மீன் விழா நிகழ்வுகள் சமூக ஊடகங்களில் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெருவிளக்கு ஏற்றப்படும் கொப்பரை 5.9 அடி உயரமும், 250 கிலோ எடையும் கொண்டது. இந்தக் கொப்பரை ஐம்மாழைகளால் மூன்று அடுக்குகளாக செய்யப்பட்டது. பெருவிளக்குக் கொப்பரையில் மக்களால், காணிக்கையாக வழங்கப்படும் 3,500 லிட்டர் நெய் மற்றும் 1000 மீட்டர் பருத்தித் துணிகளைப் பயன்படுத்தி நாளை மாலை 6 மணிக்கு பெருவிளக்கு ஏற்றப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் கார்த்திகை ஆரல் நாள்மீன் விளக்குத் திருவிழா பல ஆயிரம் ஆண்டுகளாகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மாலையில் வீடுகளில் அடுப்பு நாள்மீன் விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். நாளை திருக்கார்த்திகை ஆரல் நாள்மீன் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோவில் மலை மீது பெருவிளக்கு ஏற்றப்படும். அதற்குப் பின்னர் வீடுகளை விளக்குகளால் ஒப்பனை செய்து தமிழ்மக்கள் கொண்டாடி மகிழ்கி;ன்றனர். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,071.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.