Show all

கொரோனா தடுப்பூசி வெற்றி! விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம்

கொரோனாவிற்கு எதிராக அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி 94.5 விழுக்காடு தடுப்பு ஆற்றல் கொண்டு இருப்பதாக முடிவுகள் வெளியாகி உள்ளது. மூன்று கட்ட மனித சோதனைக்கு பின் இந்த முடிவுகள் வெளியாகி உள்ளது.

01,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவிற்கு எதிராக அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி 94.5 விழுக்காடு தடுப்பு ஆற்றல் கொண்டு இருப்பதாக முடிவுகள் வெளியாகி உள்ளது. மூன்று கட்ட மனித சோதனைக்கு பின் இந்த முடிவுகள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அரசின் நேரடி உதவியுடன் மாடர்னா நிறுவனம் உருவாக்கி இருக்கும் இந்த தடுப்பூசி பெரிய அளவில் நம்பிக்கை அளித்துள்ளது . இந்த குறிப்பிட்ட தடுப்பூசி மற்ற தடுப்பூசிகளை விட கொஞ்சம் வித்தியாசமானது என்று அமெரிக்க அரசு கூறியுள்ளது.

உலகம் முழுக்க பல்வேறு நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மூன்று கட்ட சோதனைகளை முடித்து இருக்கும் மாடர்னா நிறுவனம் இதற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது.

மூன்றாம் கட்ட மனித சோதனைக்கு 15000 பேருக்கு 100 மைக்ரோ கிராம் கொடுக்கப்பட்டது. இரண்டு முறையும் இதே அளவு கொடுக்கப்பட்டது. 
இவர்கள் எல்லோரையும் தொடர்பு படுத்தி, இந்த மாடர்னா தடுப்பு மருந்து எப்படி வேலை செய்கிறது என்று கண்டுபிடித்து உள்ளனர். இந்த மருந்தின் நோய் தடுப்பாற்றல் 94.5விழுக்காடு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு கிழமைகளில் இந்த 15ஆயிரம் பேரில்; 5.5 விழுக்காடு பேர்கள் மட்டுமே தடுப்பு மருந்து பெற்றும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள். இதன் மூலம் இந்த மாடர்னா தடுப்பு மருந்து 94.5விழுக்காடு பயன் அளிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மருந்தில் பெரிய அளவில் பக்க விளைவுகள் இல்லை. பொதுவாக தடுப்பூசி போட்ட பின் ஏற்படும் லேசான காய்ச்சல் , ஊசி போட்ட இடத்தில் வலி ஆகியவை மட்டுமே ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மாடர்னா ஐஎன்சி நிறுவனத்துடன் அமெரிக்க அரசு இணைந்து இந்த தடுப்பூசி உருவாக்கி உள்ளது. மாடர்னா நிறுவனம் உருவாக்கி உள்ள இந்தத் தடுப்பூசிக்கு ‘கோவி’ என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் “வேகப் போராட்ட சிகிச்சை” என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கும் முதல் தடுப்பூசி இது ஆகும்.

இதற்கு விரைவாக அனுமதி வாங்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தில் அமெரிக்கா இந்த மருந்தை ஆராய்ச்சி செய்து வருகிறது. இதில் மூன்றாம் கட்ட மனித சோதனைக்காக 472 மில்லியன் டாலரை அமெரிக்க அரசு செலவு செய்துள்ளது. மொத்தம் 500 மில்லியன் தடுப்பூசிகளை அடுத்த ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்காக மாடர்னா உருவாக்க திட்டமிட்டுள்ளது. 

இந்த மாடர்னா மருந்து எம்ஆர்என்ஏ முறைப்படி செயல்படும் மருந்து ஆகும். கொரோனான நுண்நச்சுக்கு எதிரான தடுப்பு தகவல்களை இந்த எம்ஆர்என்ஏதான் உடலுக்குள் கொண்டு செல்லும். கொரோனாவின் கூம்பு போன்ற புரதங்களை தாக்கி அழிக்கும் ஆற்றலை இந்த எம்ஆர்என்ஏதான் உடலுக்குள் கொண்டு செல்லும். இதனால்தான் இந்த குறிப்பிட்ட தடுப்பூசி மற்ற மருந்துகளை விட கொஞ்சம் வித்தியாசமானது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.