Show all

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் விதித்தார் தடை! போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் போக்குவரத்துக்கு

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் போக்குவரத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தடை விதித்து விட்டார்.

இந்தோனேஷியாவில், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம், ஐந்து மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானதில், 189 பேர் பலியாகினர். ஆண்;மையில், இதே ரக விமானம், எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளானதில், 157 பேர் உயிரிழந்தனர். இதனால், இந்த ரக விமானங்களின் இயக்கத்துக்கு, சிங்கப்பூர், பிரிட்டன், சீனா, எத்தியோப்பியா, கனடா உள்ளிட்ட நாடுகள், தடை விதித்தன. நம் நாட்டிலும், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமான சேவை நிறுத்தப்படுவதாக, விமான போக்குவரத்து துறை அறிவித்தது.

தற்போது அமெரிக்காவும் போயிங் ரக விமான சேவையை நிறுத்துவதாக அதிபர் டெனால்டு டிரம்ப் அறிவித்தார். அமெரிக்கர்களின் நலனுக்காகவே இந்த முடிவு என தெரிவித்தார். மேலும் போயிங்737 மேக்ஸ் ரக விமானங்கள் வாங்குவதற்கான ஆணைகளை அந்நாட்டு விமான போக்குவரத்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

விமானம் பறக்கும் உயரத்தை கணிக்கும் உபகரணம் செயலிழக்கும் பழுது ஏற்படுவதான குற்றச்சாட்டு இந்த ரக விமானத்தின் மீது வைக்கப் படுகிறது. 

விமானத்தில் ஆட்டோ பைலட் மென்பொருள் விமானியின் கட்டுப்பாட்டுக்கு இணங்காது. இதுதான் அடிப்படை பிரச்சினை. போயிங் அதை சரி செய்யவேண்டும். இல்லை என்றால் உயரத்தை கணிக்கும் உபகரணம் வேலை செய்யவில்லை என்றால் ஆபத்துதான். என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் நடந்த விபத்தில் விமான நிறுவனம் சரியாக பராமரிக்கவில்லை என்று சொல்லப்பட்டது. அதாவது அந்த உயரத்தை கணிக்கும் உபகரணம் வேலை செய்யவில்லை என்று குறிப்பு எழுதியபின்னரும் கூட அதை சரி செய்யவில்லை என்கிறார்கள். கருப்பு பெட்டியைத் திறந்து என்ன ஆனது என்று ஆராய்ந்தால் முழு உண்மையும் தெரிய வருமாம். 

பல விமான நிறுவனங்கள் இப்பொழுது செலவினங்களை குறைக்க இது போன்ற சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் பாதுகாப்பு அம்சங்களில் கோட்டை விடுவது வாடிக்கையாகி விட்டது. என்று கூறப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,091.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.