Show all

88ஆண்டுகளுக்கு பிறகு கியூபாவிற்கு சென்றுள்ள அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா

88 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையே மீண்டும் உறவு மலரத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கியூபாவிற்கு தற்போது சென்றுள்ளார்.

1959-ம் ஆண்டு கியூபாவில் புரட்சி ஏற்பட்ட பின்னர் அமெரிக்க ஜனாதிபதிகள் இதுவரை கியூபாவிற்கு சென்றது இல்லை. ஆனால் தற்போது இருநாடுகள் இடையே புதிய அத்தியாயமாக அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா சென்று இருப்பதால் கியூபா மக்களிடையே அமெரிக்காவை பற்றிய எண்ணம் மாறத்துவங்கியுள்ளது.

 

கியூபாவில் கடந்த 1959-ம் ஆண்டு புரட்சி ஏற்பட்டது. அந்தப் புரட்சிக்குப் பின்னர் கியூபா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது.

இந்தக் கருத்து வேறுபாடு காரணமாக அமெரிக்க ஜனாதிபதிகள் கடந்த 88 ஆண்டுகளான கியூபாவிற்கு செல்லாமல் புறக்கணித்து வந்தனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் வரை கியூபாவின் அதிபராக பிடல் காஸ்ட்ரோ இருந்தார்.

அவரது கம்யூனிச ஆட்சி முறையைக் கண்டு அமெரிக்கா ஒதுங்கியே இருந்தது. அமெரிக்காவிற்கு அருகாமையில் கியூபா அமெரிக்காவிடம் எதற்கும் கையேந்தாமல் சொந்த காலிலேயே தனது பொருளாதாரத்தை உயர்த்தியது.

 

கியூபாவிற்கு அமெரிக்கா துவக்கத்தில் பொருளாதாரத்தடைகள் விதித்த போதும் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ அதைக்கண்டு மனம் தளரவில்லை.

உலகின் சர்க்கரை கிண்ணம் என்ற சரித்திர சாதனையை படைக்கும் வகையில் கியூபாவில்  கரும்பு உற்பத்தி மிக அதிக அளவில் ஏற்பட்டது.

கியூபாவில் உலகின் வேறு எந்த நாட்டிலும் செய்யப்படாத சாதனைகளாக  மக்களுக்கு தேவையான வீடுகள், மக்கள் மருத்துவம் பெற இலவச மருத்துவ வசதி வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, ராணுவத்தில் வேலை போன்றவற்றை கியூபா அரசு அளித்தது.

வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் புற்று நோயால் அவதிப்பட்டபோது கியூபாவிலேயே மருத்துவ சிகிச்சை பெற்றார். லத்தீன் அமெரிக்கநாடுகள் கியூபாவுடன் நெருங்கிய உறவை மேற்கொண்டிருந்தன.

 

இந்த நிலையில் கியூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோவ் தனது உடல் நிலை காரணமாக பதவியில் இருந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் பதவி விலகினார்.

அவர் பதவிவிலகியதும் கியூபாவின் புதிய அதிபராக அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோ பதவியேற்றார்.

ரவுல் காஸ்ட்ரோ பதவியேற்ற நிலையில் அமெரிக்கா கியூபாவுடன் உறவு ஏற்படுத்திக் கொள்ள விரும்பியது. கியூபாவில் உள்ள குவாண்டமோவில் அமெரிக்காவின் ரகசிய சிறை உள்ளது. அந்த சிறையில் பெரும் தீவிரவாதிகளையும், நாட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களையும் அமெரிக்கா அடைத்து சித்ரவதை  செய்தது.

குவாண்டமோ சிறையில் என்ன நடக்கிறது என்பதே வெளியுலகிற்கு தெரியாமல் இருந்து வந்தது. சரித்திர முக்கியத்துவம் மிக்க ஒரு வருகையாக அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபா சென்றடைந்துள்ளார்.

 

1959-ல் நடந்த புரட்சிக்குப் பின்னர் தொடர்ந்த இரு நாட்டுக்கும் இடையிலான மோசமான உறவுகளை அடுத்து அங்கு வருகை செய்யும் முதலாவது அமெரிக்க அதிபர் இவராவார். ஹவானாவில் திறக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க தூதரகத்தில் உரையாற்றிய அவர் இந்த வருகை ஒரு சரித்திரம் என்று விவரித்ததுடன் பழைய நகருக்கும் வருகை  புரிய உள்ளார். கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவை ஒபாமா சந்திப்பார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.