Show all

தங்களுக்கு முடிவுரை எழுதிக் கொண்ட அந்த இரண்டு பேர்! ஜி ஜின்பிங் வாழ்நாள் அதிபராக எதிர் வாக்களித்தவர்கள்

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன அதிபராக பதவியேற்று, உலகின் கவனத்தை சீனாவின் பக்கம் திருப்பத் தொடங்கியவர் ஜி ஜின்பிங். பதவியேற்ற பின் முதல் அதிரடியாக கட்சியிலும், ஆட்சியிலும் ஊழல்களை களையெடுக்க தொடங்கினார். அதன்பயனாக, 70,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்தது. தொடர்ந்து அவர் எடுத்த மக்கள் நலன் சார்ந்த விசயங்கள் சீனாவில் பெருத்த வரவேற்பை பெற்றன. மேலும் அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்னைகளை கையாண்ட விதம், பொருளாதார கொள்கை என அவரின் அதிரடி தொடரவே, மக்கள் அதிபராக மாறினார். அதன் பிரதிபலிப்பே, கடந்த ஆண்டு நடந்த சீன கம்யூனிஸ்ட் மாநாட்டில் மீண்டும் அதிபராக முடிசூடப்பட்டார். 

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான உலக நாடுகள் எதிர்ப்பு, ரஷ்ய அதிபர் புதின் மீதான எதிர்மறை விமர்சனம் உள்ளிட்டவைகளால் 130 கோடி மக்களை தாண்டி ஜி ஜின்பிங், உலகின் அதிமுதன்மைத் தலைவராக உருவெடுத்துவருகிறார். இந்நிலையில், சீனாவின் நிரந்தர அதிபராக ஜி ஜின்பிங் இருக்கும் வகையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. சீன அதிபராக ஒருவர் இரண்டு முறை மட்டுமே இருக்க முடியும். ஜி ஜின்பிங் இரு முறை தேர்வு செய்யப்பட்டுவிட்டார். இதனையடுத்து, அவரை நிரந்தர அதிபராக இருக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர சீன கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது. அதற்கான, சட்டத்திருத்தை நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 2,958 உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாகவும், 2 பேர் எதிராகவும் வாக்களித்தனர். (அந்த இரண்டு பேர் கதை முடிந்ததா!) 3 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில் சீனாவின் நிரந்தர அதிபராக ஜி ஜின்பிங் மாறியுள்ளார்.

நம்ம மோடிக்குக் கூட இப்படியொரு ஆசை உண்டு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,724.

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.