Show all

கோடிசுவரப் பாட்டி தெருவோரம் அனாதையாக மரணம்

10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் பகுதியில் அனாதையாக இறந்து கிடந்த பாட்டியின், பையில் ரூ.2 லட்சம் பணமும், ரூ.7.5 கோடி ரூபாய்க்கான வங்கி கணக்கு புத்தகமும் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். பெய்ரூட்டின் முதன்மைச் சாலை பகுதியில்  கை, கால்கள் இயங்காத நிலையில், பாத்திமா ஒத்மன் எனும் வயதான  பாட்டி ஒருவர் வெகு ஆண்டுகளாகவே பிச்சையெடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில் அந்த சாலை வழியே அன்றாடம் செல்லும் ஒருவர் நேற்று  இவரது உடல் அசைவில்லாமல் கிடந்ததை பார்த்துள்ளார்.  அருகில் சென்று பார்த்தபோது அந்த பாட்டி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவலை அளித்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவரது உடலை கைபற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரிய வந்தது. அவரது பையினை காவல்துறையினர் பரிசோதனை செய்தனர்.

அப்போது அதில் ரூ.2 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது. மேலும் அவரது வங்கி கணக்கு புத்தகத்தில் ரூ.7.5 கோடி இருப்பு உள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான கணக்கு புத்தகமும் அந்த பையில் இருந்தது.

அதிக நிர்வாகச் செலவில்லாத தொழில், ஆடை அணிகலன்கள், குடியிருக்க வீடு எதுவும் தேவையில்லை. எல்லா வருமானமும் சேமிப்பாகி விட்டது நம்ம மோடியும் இப்படித்தான் மக்களை நம்பாமல்,  மக்களுக்கு எதவும் செய்யாமல், சரக்கு-சேவை வரி, பெட்ரோல் டீசல் விலையேற்றம், ஏழை மக்களுக்கான மானிய ஒழிப்பு என்று அரசு கருவூலத்தில் கோடி கோடியாக குவித்துக் கொண்டிருக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,797.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.