Show all

பிரிட்டன் இல்லாமல் நடைபெறும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மாநாடு

பிரிட்டன் இல்லாமல் முதல் முறையாக நடைபெறும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மாநாடு

40 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பிரிட்டன் இல்லாமல் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மாநாடு நடைபெற்று வருகிறது.

ஐரோப்பிய யூனியன் கடந்த 1958-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இருப்பினும் ஐரோப்பிய யூனியன் கவுன்சில் மாநாடு கடந்த 1975-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற அனைத்து மாநாடுகளிலும் பிரிட்டன் கலந்து கொண்டு வந்தது.

இந்நிலையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பிரிட்டன் இல்லாமல் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மாநாடு நடைபெற்று வருகிறது. பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் இந்த மாநாடு இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

பிரிட்டன் வெளியேறினால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஐரோப்பிய யூனியனின் இதர 27 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

வெளியேற்றத்துக்குப் பிறகு பிரிட்டன் ஐரோப்பிய யூனியனுடன் எந்தவிதமான உறவினை கையாளப் போகிறது என்பது குறித்தும் விவாதம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் பிரசல்ஸ் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. 

முன்னதாக, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பாக பிரெக்ஸிட் எனப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பு பிரிட்டனில் கடந்த வௌ;ளிக்கிழமை நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக 52 சதவீத மக்கள் வாக்களித்தனர்.

 

பிரிட்டன் அரசு இன்னும் முறைப்படி வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை. இதனிடையே, டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், செப்டம்பர் மாதத்திற்குள் அடுத்த பிரதமரை பிரிட்டன் தேர்வு செய்ய வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.